இந்துமா சமுத்திரத்தில் வல்லரசுகளின் போட்டி தீவிரம்:ஜனாதிபதி ரணில்
இந்துமா சமுத்திரத்தில் வல்லரசுகளுக்கிடையிலான போட்டித்தன்மை தீவிரமடைந்துள்ளது. இதில் பக்க சார்பின்றி இலங்கை மௌனித்திருக்கும். வல்லரசுகளுக்கிடையிலான போட்டியிலிருந்து இலங்கையை விலக்கி வைத்திருப்பதற்கே தான் முயற்சிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். வல்லரசுகளுக்கிடையிலான இப்போட்டி நிலைமையானது எதிர்காலத்தில் பிராந்தியத்தில் எவ்வாறான நிலைமையை ஏற்படுத்தும் என்பதை ஊகிக்க முடியாது என்பதால் , அனைத்திற்கும் தயாராகும் வகையில் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக பலம்மிக்க முப்படையை உருவாக்குவதற்காக ‘பாதுகாப்பு 2030’ செயற்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அநுராதபுரம் விமானப்படை தளத்தில் நேற்று சனிக்கிழமை முப்படையினர் மற்றும்…

