சிறுவர்களிடையே அதிகமாகப் பரவும் இன்புளுவன்சா வைரஸ்

இன்புளுவன்சா A வைரஸ் சிறுவர்களிடையே அதிகமாகப் பரவும் அபாயம் காணப்படுவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் சிறுவர் சிகிச்சை நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இதற்கிடையில், தற்போதைய வெப்பமான காலநிலை காரணமாக, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிக தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். இன்றைய நாட்களில் பகலில் அதிகமாக உடல் வியர்ப்பதால் சிலருக்கு உடல் உபாதை, தலைவலி, வாந்தி போன்ற அறிகுறிகள் தோன்றும். வேலை செய்ய முடியாத நிலை…

Read More

குவித்தோவா சாம்பியன்

அமெரிக்காவில் நடைபெறும் மயாமி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், செக் குடியரசு வீராங்கனை பெத்ரா குவித்தோவா சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் கஜகஸ்தானின் எலனா ரைபாகினாவுடன் (23 வயது, 10வது ரேங்க்) மோதிய குவித்தோவா (33 வயது, 15வது ரேங்க்), கடும் போராட்டமாக அமைந்த முதல் செட்டை 7-6 (16-14) என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலை பெற்றார். அதே வேகத்துடன் 2வது செட்டில் ஆதிக்கம் செலுத்திய அவர், ரைபாகினாவின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்து…

Read More

மாணவர்கள் தங்களது காதலர்களுடன் ‘ரொமான்ஸ்’ செய்ய ஒரு வாரம் விடுமுறை: சீனா

சீனாவில் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்காக கல்லூரி மாணவர்கள் தங்களது காதலர்களுடன் ரொமான்ஸ் செய்வதற்காக ஒருவாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சீனாவில் மக்கள் தொகை பிறப்பு விகிதம் குறைவதைத் தடுப்பதற்காக, அந்நாடு பல்வேறு புதிய புதிய திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் தலைநகர் பீய்ஜிங்கில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தங்களது காதலர்களுடன் ரொமான்ஸ் செய்வதற்காக ஒரு வாரம் விடுமுறை அறிவித்துள்ளது. அதேபோல் பல கல்லூரிகளும் ஏப்ரல் முதல் வாரத்தில் மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளன. ஃபேன் மெய் கல்விக்…

Read More

3 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை

14 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 3 தமிழ் அரசியல் கைதிகள் வவுனியா மேல் நீதிமன்றத்தினால் இன்று (03) விடுவிக்கப்பட்டனர். 2009 ஆம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் இருந்த யாழ் வேலணையை சேர்ந்த இ. திருவருள், யாழ் கரவட்டியை சேர்ந்த ம. சுலக்சன், முள்ளியவளையை சேர்ந்த  க. தர்சன் ஆகிய மூவருக்கும் எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத நிலையில், குறித்து…

Read More

ஹீரோவாகும் விஜய்யின் மகன்

நடிகர் விஜய்யின் மகன் தற்போது குறும் படத்தை இயக்கி வருகிறார். விரைவில் வெள்ளித்திரையில் ஒரு இயக்குனராக அவர் வலம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், விஜய்யின் மகன் சஞ்சய்க்கு ஹீரோவாக நடிக்க வாய்ப்பு தேடி வந்துள்ளது. ஆம், தெலுங்கில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் உப்பெண்ணா. இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் விஜய்யின் மகன் சஞ்சய்யை நடிக்க வைக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read More

நானியின் ‘தசரா’ 2 நாட்களில் ரூ.53 கோடி வசூலித்து அசத்தல்

நானி நடித்துள்ள ‘தசரா’ திரைப்படம் இரண்டு நாட்களில் இந்திய அளவில் ரூ.53 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடிப்பில் பான் இந்தியா முறையில் நேற்று (மார்ச் 30) திரையரங்குகளில் வெளியான படம் ‘தசரா’. கீர்த்தி சுரேஷ், ஷைன் டாம் சாக்கோ, சமுத்திரகனி, சாய்குமார், தீக் ஷெட்டி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை ஸ்ரீலக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ளது. ரூ.70 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரசிகர்களிடையே…

Read More

சரணடையும் ட்ரம்ப்; ஆயத்தமாகும் நியூயார்க் நகரம்: வன்முறைகளை தவிர்க்க போலீஸ் குவிப்பு

ஆபாசப் பட நடிகைக்கு ரகசியமாக பணம் கொடுத்த புகாரில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் விரைவில் சரணடைவார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் ட்ரம்ப் சரணடையும்போது போராட்டங்கள் நடந்தால் அதை கண்காணிக்கவும், வன்முறைகளைத் தவிர்க்கவும் நியூயார்க் நகரில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். டொனால்டு ட்ரம்ப் கடந்த 2016-ல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டார். இந்த தேர்தலுக்கு முன்பு, ஸ்டோர்மி டேனியல்ஸ் என்ற ஆபாசப்…

Read More

67 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் மீட்பு

தலைமன்னார் கடற்பரப்பில் 67 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் கையிருப்பு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. தலைமன்னார், வெலிப்பாறையை அண்மித்த கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த ஐஸ் போதைப்பொருள் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். அங்கு மிதந்து வந்த ஒரு பையை சோதனையிட்டதில், நான்கு பார்சல்களில் அடைக்கப்பட்ட 04 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டது. ஐஸ் போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டு செல்ல முடியாமல் கடத்தல்காரர்கள் கடலில் விட்டுச் சென்றிருக்கலாம் என…

Read More

உத்தேச பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து அரசாங்கத்திற்கு எச்சரித்துள்ளோம் – சர்வதேச மன்னிப்புச்சபை

உத்தேச பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து அரசாங்கத்திற்கு எச்சரித்துள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. பயங்கரவாத தடைச்சட்டம் சர்வதேச மனித உரிமை சட்டங்களிற்கு ஏற்ற விதத்தில் காணப்படவேண்டும் என்ற வேண்டுகோளை இலங்கை அரசாங்கத்திற்கு விடுத்துள்ளதாக  சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. சர்வதேச மன்னிப்புச்சபையின் சிரேஸ்ட இயக்குநர் டெப்புரோஸ் முச்சேனா தலைமையிலான  சர்வதேச மன்னிப்புச்சபையின்  குழுவொன்று மார்ச் மாதம் 27 ம் திகதி முதல் இரண்டாம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தது. இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட …

Read More

கண்ணிவெடி அகற்றும் இலங்கையின் இறுதி மூலோபாய ஒழுங்கமைப்பை அறிவிப்பு

கண்ணிவெடி அகற்றும் இலங்கையின் இறுதி மூலோபாய ஒழுங்கமைப்பை வெளிப்படுத்திள்ளது. அதன்படி, 2027ஆம் ஆண்டு இறுதிக்குள் நாட்டை கண்ணிவெடிகள் இல்லாத நாடாக மாற்றுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.  நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் ஆலோசனைக்கு அமைய கண்ணிவெடிகளை அகற்றும் அரசாங்கத்தின்  வேலைத்திட்டத்தின் கீழ் இது நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன்படி, இலங்கையில் கண்ணிவெடி அகற்றுவதற்கான இறுதி மூலோபாய ஒழுங்கமைப்புத் திட்டத்தை, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்யானந்தா தலைமையில் கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் வெள்ளிக்கிழமை…

Read More