நிதி மோசடியில் ஈடுபட்ட போலி வைத்தியர் கைது

வைத்தியர் போல் நடித்து வௌிநாடுகளுக்கு நபர்களை அனுப்புவதாக கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட ஒருவர் பொரளை ரிட்வே சிறுவர் வைத்தியசாலைக்கு முன்பாக வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் பொரளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேகநபரிடம் நடத்திய விசாரணையில், அவுஸ்திரேலியாவில் தொழில் வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி, கொழும்பு தேசிய வைத்தியசாலையினுள் வைத்தியர் போல் நடித்து, ஒருவரிடம் 70,000 ரூபாவை பெற்றுக் கொண்டமை தெரியவந்துள்ளது. சந்தேக நபர் பன்னல பிரதேசத்தை சேர்ந்த 56 வயதுடையவர் எனவும்…

Read More

ஐபிஎல் போட்டியில் விளையாடியபோது வில்லியம்சன் காயம்: உலகக் கோப்பை தொடரை மிஸ் செய்ய வாய்ப்பு

நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் லீக் போட்டியில் விளையாடிய போது நியூஸிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் காயமடைந்தார். இந்த சூழலில் எதிர்வரும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை மிஸ் செய்ய வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. அவருக்கு வலது கால் மூட்டுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனை நியூஸிலாந்து கிரிக்கெட் உறுதி செய்துள்ளது. அவருக்கு அடுத்த மூன்று வார காலத்திற்குள் அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளது. மேலும், இந்த காயத்தில் இருந்து மீண்டு, உலகக் கோப்பை தொடரில்…

Read More

ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் | முதல் சுற்றில் சாய்னா தோல்வி

ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சாய்னா நெவால் முதல் சுற்றுடன் வெளியேறினார். பிரான்ஸின் ஆர்லியன்ஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 32-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் சாய்னா நெவால், 65-ம் நிலை வீராங்கனையான துருக்கியின் நெஸ்லிஹான்யிகியை எதிர்த்து விளையாடினார். 39 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சாய்னா நெவால் 16-21, 14-21 என்ற நேர் செட்டில் தோல்வி அடைந்தார். மற்றொரு…

Read More

ட்ரம்ப் மீதான அவதூறு வழக்கு தள்ளுபடி: ரூ.1 கோடி வழங்க நடிகை ஸ்டார்மிக்கு உத்தரவு

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீது ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் தொடுத்த அவதூறு மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம், ட்ரம்புக்கு ரூ.1 கோடி வழங்க உத்தரவிட்டது. அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் உடனான தொடர்பு குறித்து வெளியில் தெரிவிக்கக் கூடாது என தனக்கு மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்ததாக ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு ட்ரம்ப் மறுப்பு தெரிவித்திருந்தார். இது தொடர்பாக,கடந்த 2018-ம் ஆண்டு…

Read More

இங்கிலாந்து மன்னர் சார்லஸுக்கு அடுத்த மாதம் முடிசூட்டு விழா

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் கடந்த ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து இங்கிலாந்தின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் கடந்த ஆண்டு அரியணை ஏறினார். அவர் அரியணையில் ஏறினாலும் அதிகாரப்பூர்வ முடிசூட்டு விழா நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில், மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா வரும் மே மாதம் 6-ம் தேதி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிப்படுத்தியுள்ளது. செங்கோல் ஏந்தி.. இந்த முடிசூட்டு விழாவின் போது பாரம்பரிய மரபுப்படி கையில் செங்கோல், தடி ஆகியவற்றை…

Read More

ஊக்க மருந்து விவகாரத்தில் சஞ்ஜிதா சானுவுக்கு 4 ஆண்டுகள் தடை

காமன்வெல்த் விளையாட்டு பளு தூக்குதலில் இரு முறை தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனையான சஞ்ஜிதா சானு கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஊக்க மருந்து பரிசோதனையில் தோல்வி அடைந்ததால் அவருக்கு தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை 4 ஆண்டுகள் விளையாட தடை விதித்துள்ளது. குஜராத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் தேசிய விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பளு தூக்குதல் வீராங்கனையான சஞ்ஜிதா சானுவிடம் தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை சோதனை நடத்தியது. இதில்…

Read More

பறவைகளைக் கூண்டுக்குள் அடைக்க நடிகை ஸ்ரேயா எதிர்ப்பு

சமூக வலைதளத்தில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் ஸ்ரேயா. இவர் சமீபத்தில், மும்பை அருகிலுள்ள அலிபாக்கில் நட்சத்திர ஓட்டல் ஒன்றுக்குச் சென்றார். அங்கு கூண்டுக்குள் பறவைகளை அடைத்து வைத்துள்ளனர். அதை வீடியோ எடுத்துள்ள ஸ்ரேயா, பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நீங்கள் பறவைகளை நேசிப்பவராக இருந்தால், அதை சிறை வைக்கக் கூடாது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அவை சுதந்திரமாகத் தான் இருக்க வேண்டும். சிறு கூண்டுக்குள் இத்தனைப் பறவைகளா? உங்களுக்குப் பொறுப்பு வேண்டாமா? இது சட்டப்பூர்வமானதா?”…

Read More

என் மீதான கிரிமினல் குற்றச்சாட்டு அமெரிக்காவுக்கே இழுக்கு – ட்ரம்ப் ஆவேசம்

ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் நீதிமன்றத்தில் ஆஜராக வந்தபோது கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அதிபர் ட்ரம்ப், தன் மீதான கிரிமினல் குற்றச்சாட்டு அமெரிக்காவுக்கே இழுக்கு என்று தெரிவித்துள்ளார். டொனால்டு ட்ரம்ப் கடந்த 2016-ல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டார். இந்த தேர்தலுக்கு முன்பு, ஸ்டோர்மி டேனியல்ஸ் என்ற ஆபாசப் பட நடிகையுடன் இருந்த தொடர்பை மறைப்பதற்காக அவருக்கு ட்ரம்ப் 1,30,000 டாலர்கள் வழங்கியதாக புகார் எழுந்தது….

Read More

வரி வருமானம் பாரிய அளவில் அதிகரிப்பு

இந்த வருடத்தின் முதல் காலாண்டில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தனிநபர் முற்பண வருமான வரி தொடர்பான வருமானமாக 25,577 மில்லியன் ரூபாவை ஈட்டியுள்ளது. ஜனவரி மாதத்தில் 3,106 மில்லியன் ரூபாவும் பெப்ரவரியில் 10,540 மில்லியன் ரூபாவும் வசூலித்துள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மார்ச் மாதத்தில் 11,930 மில்லியன் ரூபா வரி வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் வரி வருமானத்தில் படிப்படியாக…

Read More

பால் விஷமானதில் 13 சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

குடித்த பாலினால் ஒவ்வாமை ஏற்பட்டு 13 சிறார்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியில் உள்ள முன்பள்ளி ஒன்றில் வலய பணிமனையால் வழங்கப்பட்ட பாலினால் குறித்த ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. வீட்டுக்கு சென்ற குழந்தைகள் வாந்தி உள்ளிட்ட அறிகுறிக்குள்ளாகினர். இதனால் அச்சமடைந்த பெற்றோர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்த நிலையில் 13 சிறார்கள் இவ்வாறு அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் தொடர்ந்தும் விடுதியில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். குறித்த பால் பக்கட் காலாவதி ஆகவில்லை எனவும், பரிசோதனைக்காக பொரளையில் உள்ள…

Read More