யாழ். இருபாலை சிறுவர் இல்லத்தில் சிறுமிகள் துஷ்பிரயோகம் 

யாழ்ப்பாணம் இருபாலை பகுதியில் சட்டவிரோதமான முறையில் இயங்கிய சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுமிகள் 80 வயதான தலைமை போதகரினால் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்பட்டனர் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.  இருபாலை பகுதியில் கிறிஸ்தவ சபை ஒன்றினால் சட்டவிரோதமான முறையில் நடாத்தி செல்லப்பட்ட சிறுவர் இல்லத்தில் இருந்து 16 சிறுவர்கள் அண்மையில் மீட்கப்பட்டுள்ளனர்.  குறித்த சிறுவர் இல்லத்தில் இருந்த அருட்சகோதரி ஒருவர் உள்ளிட்ட மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.  இந்நிலையில்…

Read More

SLINEX-23 கூட்டு கடற்படைப் பயிற்சியில் பங்கேற்கும் ‘ஐஎன்எஸ் கில்தான்’ இந்திய கடற்படைக் கப்பலை

கொழும்பு துறைமுகத்தில் நடைபெறும் SLINEX-23 கூட்டு கடற்படைப் பயிற்சியில் பங்கேற்கும் ‘ஐஎன்எஸ் கில்தான்’ என்ற இந்திய கடற்படைக் கப்பலை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரேமித பண்டார தென்னகோன் பார்வையிட்டார். நேற்று காலை கப்பலுக்கு சென்ற இராஜாங்க அமைச்சரை இந்தியாவின் இரு கப்பல்களின் கட்டளை அதிகாரிகள் வரவேற்றனர். இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அதிமேதகு கோபால் பாக்லே அவர்களும் இந்த விஜயத்தின் போது கலந்து கொண்டார். கொழும்பில் நடைபெறும் வருடாந்த இலங்கை – இந்திய கடற்படை கூட்டுப்…

Read More

வாபஸ் பெறுவதாக இருந்தால் எழுத்துப்பூர்வமாக அறிவிக்கவும்

பொதுமக்களின் எதிர்ப்பை கருத்திற் கொண்டு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை வாபஸ் பெற முடிவு எடுக்கப்பட்டாலும், குறித்த அந்த முடிவில் தனக்கு நம்பிக்கை இல்லை எனவும், இதற்கு முன்னரும் மக்களால் எதிர்க்கப்பட்ட சட்டமூலங்களை அரசாங்கம் வாபஸ் பெற்றாலும், பின்னர் தமது பெரும்பான்மையை பயன்படுத்தி நிறைவேற்றிக் கொண்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். எனவே அரசாங்கம் இந்த பங்கரவாத சட்டத்தை வாபஸ் பெறுவதாக இருந்தால், அது தொடர்பில் தெளிவான எழுத்துமூல அறிவிப்பை வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச…

Read More

பிபா தரவரிசையில் 6 வருடங்களுக்குப் பிறகு அர்ஜெண்டினா முதலிடம்7

பிபா தரவரிசை பட்டியலில் 6 வருடங்களுக்கு பிறகு முதன்முறையாக முதல் இடத்துக்கு முன்னேறி உள்ளது உலக சாம்பியனான அர்ஜெண்டினா கால்பந்து அணி. அர்ஜெண்டினா அணி கடந்த மாதம் நடைபெற்ற நட்பு ரீதியிலான போட்டியில் இரு ஆட்டங்களில் வெற்றி கண்டிருந்தது. இதன் மூலம் தரவரிசையில் ஒரு இடம் முன்னேற்றம் கண்டு முதலிடத்தை பிடித்துள்ளது. அந்த அணி 6 வருடங்களுக்குப் பிறகு தற்போதுதான் தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. அதேவேளையில் கடந்த மாதம் இறுதியில் மொரோக்கோவிடம் தோல்வி அடைந்த பிரேசில்…

Read More

அமெரிக்காவும் தென்கொரியாவும் அணு ஆயுதப் போரை துண்டுவதாக சாடலுடன் வடகொரியா எச்சரிக்கை

அமெரிக்காவும், தென்கொரியாவும் நடத்தும் கூட்டு ராணுவப் பயிற்சி, அணு ஆயுதப் போர் ஏற்படுவதற்கான பதற்றத்தை அதிகரிக்கின்றன என்று வடகொரியா எச்சரித்துள்ளது. இது குறித்து தென்கொரிய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கொரிய பிராந்தியத்தில் அமெரிக்கா – தென் கொரியா நடத்தும் கூட்டு ராணுவப் பயிற்சி, அணு ஆயுதப் போர் ஏற்படுவதற்கான பதற்றத்தை அதிகரிக்கின்றன. இது எந்த நேரத்திலும் வெடிக்கலாம்” என்று தெரிவித்துள்ளது. வடகொரியா இத்தகைய பயிற்சிகளை படையெடுப்பு ஒத்திகையாக பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது. அமெரிக்க – தென்கொரிய படைகள் கொரிய…

Read More

தூதரகங்களை மீண்டும் திறக்க சவுதி, ஈரான் சம்மதம் – சீன முயற்சிக்கு வெற்றி

இரு தரப்பு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் மூடிய தூதரகங்களை திறப்பதாக ஈரானும் சவுதியும் சம்மதம் தெரிவித்துள்ளன. மத்தியக் கிழக்கு நாடுகளில் ஆதிக்கத்தைப் பெற ஈரானும், சவுதியும் மோதல் போக்கை கடந்த காலங்களில் கடைபிடித்து வந்தன. தற்போது பகையை மறந்து நட்புறவில் இரு நாடுகளும் ஈடுபடத் தொடங்கியுள்ளது சர்வதேச கவனத்தை ஈர்த்து வருகிறது. ஈரான் – சவுதி அரேபியா இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை வளைகுடா நாடுகளின் பாதுகாப்பில் முக்கியத்துவத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில், இரு நாடுகளுக்கு இடையேயான வெறுப்பை…

Read More

விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாறு படத்தில் மாதவன்

நடிகர் மாதவன் மறைந்த விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கிறார். இதற்கான அறிவிப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது. முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்று படத்தை ‘ராகெட்ரி: நம்பி விளைவு’ என்ற பெயரில் இயக்கி நடித்திருந்தார் மாதவன். படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து ‘தோகா ரவுண்ட் தி கார்னர்’ (Dhokha: Round D Corner) என்ற பாலிவுட் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படங்களைத் தொடர்ந்து மாதவன் அடுத்ததாக நடிக்கும் படம் ‘ஜி.டி.நாயுடு’….

Read More

ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் | கால் இறுதி சுற்றில் பிரியன்ஷு ரஜாவத்

ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிரியன்ஷு ரஜாவத் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். பிரான்ஸ் நாட்டில் உள்ள ஆர்லியன்ஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 58-ம் நிலை வீரரான இந்தியாவின் பிரியன்ஷு ரஜாவத், போட்டித் தரவரிசையில் முதலிடமும், உலகத் தரவரிசையில் 12-வது இடமும் வகிக்கும் ஜப்பானின் கென்டா நிஷிமோடோவை எதிர்த்து விளையாடினார். இதில் பிரியன்ஷு ரஜாவத் 21-8, 21-16 என்ற நேர் செட்டில்…

Read More

வெளிநாடுகளின் உதவியுடன் உரிமைகளை பெற்றுக்கொள்ள தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்  – சுரேஸ் பிரேமச்சந்திரன்

அரசாங்கம் பொருளாதார ரீதியில் பலவீனமடைந்துள்ள சூழ்நிலையில் நாம் வெளிநாடுகளின் உதவியுடன் தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து விடயங்கைள முன்னெடுப்பது தொடர்பில் ஈபிஆர்எல்எப் மத்தியகுழுவில் கலந்துரையாடப்படதாக அக்கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். ஈ. பி.ஆர்.எல்.எப் கட்சியின் மத்தியகுழு கூட்டம் இன்று வவுனியாவில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையில் இடம்பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கட்சியின் தீர்மானங்கள் தொடர்பாக தெரிவிக்கையில், ஜனநாயக அமைப்புக்கள்…

Read More

இலங்கை குறித்து உலக வங்கியின் அதிர்ச்சி அறிக்கை

இலங்கையில் நிலவும் சீரற்ற அரசியல் சூழ்நிலை, நாட்டின் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் குறிப்பிடத்தக்க நிச்சயமற்ற தன்மையை உருவாக்குகிறது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.. கடன் நிலைத்தன்மையை மீட்டெடுக்க வெளி மற்றும் சில உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தேவைப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இலங்கையின் பொருளாதாரம் 2023 மற்றும் அதற்குப் பின்னரும் குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொள்ளும் என உலக வங்கி தனது சமீபத்திய அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. 2023 ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் 4.3 சதவீதமாக சுருங்கும் என்று அறிக்கை ஊடாக…

Read More