மஹிந்த ரணில் அல்ல

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஒப்பிடுவது பொறுத்தமற்றது. மஹிந்த ராஜபக்ஷ நாட்டை ஒன்றுப்படுத்தினாரே தவிர பிளவுப்படுத்த முயற்சிக்கவில்லை. பொதுஜன பெரமுனவின் உறுப்பினரையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக கட்சியில் இருந்து…

Read More

எல்லை நிர்ணய குழுவின் புதிய அறிக்கை பிரதமரிடம்

எல்லை நிர்ணய குழுவின் புதிய அறிக்கை இன்று (11) காலை பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்பட்டது. உள்ளூராட்சி சபைகளின் வாக்குகள் மற்றும் வரைபடங்கள் அடங்கிய ஆவணம் எல்லை நிர்ணய குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவினால் கையளிக்கப்பட்டுள்ளது.

Read More

சார்ல்ஸ்டன் ஓபன் டென்னிஸ்: ஜெபர் சாம்பியன்

கிரெடிட் ஒன் சார்ல்ஸ்டன் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் துனிசியா வீராங்கனை ஆன்ஸ் ஜெபர் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப்போட்டியில் சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிச்சுடன் (26 வயது, 11வது ரேங்க்) மோதிய ஜெபர் (28வயது, 5வது ரேங்க்) டைபிரேக்கர் வரை இழுபறியாக நீடித்த முதல் செட்டை 7-6 (8-6) என்ற கணக்கில் கைப்பற்றினார். 2வது செட்டிலும் பெலிண்டா கடும் நெருக்கடி கொடுத்த நிலையில், ஜெபர் 7-6 (8-6), 6-4 என்ற நேர் செட்களில் வென்று…

Read More

எம்பி பதவி பறிக்கப்பட்ட பிறகு முதன்முறையாக ராகுல் காந்தி வயநாடு வருகை

எம்பி பதவியில் இருந்து தகுதீ நீக்கம் செய்யப்பட்ட பிறகு முதன்முறையாக ராகுல் தொகுதி மக்களை சந்திக்க சகோதரி பிரியங்காவுடன் இன்று வயநாடு வருகிறார்.பிரதமர் மோடி குறித்து அவதூறு பேசியதாக தொடரபட்ட வழக்கில் ராகுல்காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பு வந்த உடனேயே எம்பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து வயநாட்டில் உள்ள அவரது எம்பி அலுவலகத்தின் டெலிபோன் மற்றும் இன்டர்நெட் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.இந்தநிலையில் பதவி…

Read More

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியின் கீழ் 3,820 தொன் உரம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியின் மூலம், ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பினால் கொள்வனவு செய்யப்பட்ட 3,820 தொன் யூரியா உரம் நெல் விவசாயிகளுக்கு வழங்குவதற்காக  விவசாய அமைச்சிடம், இன்று திங்கட்கிழமை கையளிக்கப்பட்டுள்ளது. பொலன்னறுவை, பதுளை, அம்பாறை, மாத்தளை, புத்தளம், குருநாகல் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் அண்மைய பொருளாதார நெருக்கடியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள 72,200க்கும் மேற்பட்ட சிறுபோக நெல் விவசாயிகளுக்கு இந்த யூரியா உரம் வழங்கப்படவுள்ளது.  அடையாளம் காணப்பட்ட நெல் உற்பத்தியாளர்களிடையே ஒருங்கிணைந்த தாவர ஊட்டச்சத்து…

Read More

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் சர்வதேச தராதரங்களிற்கு ஏற்றதாக வேண்டும் – அமெரிக்க தூதுவர்

புதிய பயங்கரவாதஎதிர்ப்பு சட்டம் சர்வதேச தராதங்களை பூர்த்தி செய்வதாக  காணப்படவேண்டும்என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். காலவாதியாகிப்போன சட்டமான பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலான பயங்கரவாத எதிர்ப்பு சட்;டம் குறித்த புதிய கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பழையபயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றியமைத்து அதனை நீக்கப்போவதாக ஜனாதிபதியும் அரசாங்கமும் வெளியிட்டுள்ள கருத்துக்களை நாங்கள் வரவேற்கின்றோம் எனவும் அமெரிக்க தூதுவர்தெரிவித்துள்ளார். இந்த சட்டத்தை மீளாய்விற்கு உட்படுத்தும் போது அனைத்து பங்குதாரர்களுடனும் நேர்மையான வலுவான கலந்தாலோசனைகள் இடம்பெறும் என…

Read More

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி சூடு சம்பவம் – நால்வர் பலி

அமெரிக்காவின் லூவில் கென்டக்கியில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் 4 பேர் கொல்லப்பட்ட நிலையில் 8 பேர் காயமடைந்துள்ளனர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட நபரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் வங்கியொன்றிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. வங்கியொன்றின் ஊழியர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதன் மூலம் அதனை நேரடிஒளிபரப்பு செய்துள்ளார். ஓல்ட் நசனல் வங்கியின் கோர்னர் ஸ்டேர்ஜன் என்ற ஊழியரே இந்த துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டுள்ளார்.பின்னர் போலீசார் அவரை சுட்டுக்கொன்றுள்ளனர். 40,45 60,63 வயதுடைய நால்வர் உயிரிழந்துள்ளனர்.

Read More

சூரியன் இன்று நண்பகல் உச்சம் கொடுக்கும் பிரதேசங்கள்

மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். சூரியனின் தொடர்பான வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ்வருடம் ஏப்ரல் மாதம் 5 ஆம்…

Read More

மலையக பல்கலைக்கழகத்தை அமைக்க ஜனாதிபதி உத்தரவு

மலையக பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டார். நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது மலையக பல்கலைக்கழக விவகாரம் தொடர்பில் இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் விடுத்த கோரிக்கையை ஏற்றே, ஜனாதிபதி மேற்படி உத்தரவை பிறப்பித்தார். நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலையால் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான அடுத்தக்கட்ட நகர்வுகள் ஸ்தம்பித்தன. இந்நிலையில் இது தொடர்பில் அமைச்சர் ஜீவன்…

Read More

தென்னாப்பிரிக்காவில் கமல்ஹாசன் – ‘இந்தியன் 2’

இந்தியன் 2’ படக்குழு தென்னாப்பிரிக்காவில் முகாமிட்டுள்ளது. அங்கு படத்தின் முக்கியமாக ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. கடந்த 1996-ல் வெளிவந்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமாக இந்தப் படம் உருவாகி வருகிறது. கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா உட்பட பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தை லைக்கா தயாரித்து வருகிறது. படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்படும் நிலையில்…

Read More