7.1 பில்லியன் டொலர் கடன் மறுசீரமைப்பிற்கு தயாராகும் இலங்கை

சீனா, இந்தியா மற்றும் பாரிஸ் கிளப் உள்ளிட்ட கடனாளிகளுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பான உடன்படிக்கைகளை மே மாதம் எட்டுவதற்கு எதிர்பார்க்கப்படவதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு உத்தியோகபூர்வ குழுவை நியமிப்பதா அல்லது இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் இறுதி உடன்பாட்டை எட்டுவதா என்பது குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினர் இறுதி முடிவை எட்டுவார்கள் என்று ரொய்ட்டர்ஸ் உடனான நேர்காணலில் மத்திய வங்கி ஆளுநர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சர்வதேச கடன் வழங்குனர்களுடன் கடன்…

Read More

தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு

2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இரண்டாவது தடவையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தலை திட்டமிட்டபடி நடத்த பல்வேறு தடைகள் இருந்தபோதிலும், தேவையான நிதி ஒதுக்கீடுகள் கிடைக்காததாலும், ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களாலும் தேர்தலை ஒத்திவைக்க நேரிட்டதாக ஆணைக்குழு வெளியிட்டுள்ள சிறப்பு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளும் தொடரும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன்…

Read More

யாழில் போதைப்பொருளுடன் பெண் கைது

யாழ்ப்பாணம் ஓட்டுமடம் – பொம்மைவெளியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 5.5 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 70 ஆயிரம் ரூபாய் பணம் என்பன கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் பொம்மைவெளி 5 ஆம் குறுக்குத்தெருவைச் சேர்ந்த 32 வயது பெண்ணே கைது செய்யப்பட்டார். உயிர்க்கொல்லி போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக நீண்ட நாள்களாக தேடப்பட்டு வந்த பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் கூறினர். யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின்…

Read More

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு விவகாரம் – இந்திய ஜப்பான் நிதியமைச்சர்கள் விளக்கம்

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் குறித்த செயற்பாட்டின் ஆரம்பம் குறித்து இந்திய ஜப்பான் வெளிவிவகார அமைச்சர்கள் இன்று கூட்டாக அறிவிக்கவுள்ளனர். வோசிங்டனில் இடம்பெறுகின்ற ஸ்பிரிங்கூட்டத்தின் போது இந்த அறிவிப்பு வெளியாகவுள்ளது. ஜப்பானின் நிதியமைச்சர் சுனிச்சி சுசுகி இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் உட்பட பலர் இந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர். இலங்கைக்கு கடன்வழங்கியுள்ள இந்தியாவும் ஜப்பானும் இலங்கைக்கான ஒருங்கிணைக்கப்பட்ட கடன்மறுசீரமைப்பு குறித்து தீவிரகவனம் செலுத்திவருகின்றன. இந்த செய்தியாளர் மாநாட்டில் இலங்கை பிரதிநிதிகளும் சர்வதேச நாணயநிதியத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.

Read More

‘கனவிலும் நினைக்காத தருணங்கள்’ – ரஜினி வாழ்த்து; நடிகர் சூரி நெகிழ்ச்சி

‘கனவிலும் நினைக்காத தருணங்களை தற்போது வாழ்ந்து வருகிறேன்’ என்று நடிகர் சூரி, நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து குறித்து தெரிவித்துள்ளார். “ ‘விடுதலை’ படத்தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், இது ஒரு திரைக்காவியம் என்று தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘விடுதலை’ இதுவரை தமிழ் திரையுலகம் பார்த்திராத கதைக்களம். இது ஒரு திரைக்காவியம். சூரியின் நடிப்பு -பிரமிப்பு. இளையராஜா -இசையில் என்றும் ராஜா. வெற்றிமாறன் – தமிழ் திரையுலகின் பெருமை….

Read More

புஷ்பா 2 கான்செப்ட் வீடியோவுக்கு ரூ.4 கோடி செலவு

சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்த படம், ‘புஷ்பா’. தேவிஸ்ரீ பிரசாத் இசையில் உருவான இந்தப் படம் 2021ம் ஆண்டு டிசம்பரில் வெளியாகி இந்தியா முழுவதும் வரவேற்பைப் பெற்றது. இப்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகிறது. இதன் படப்பிடிப்பு சீனா, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் நடக்க இருக்கிறது. இந்தப் படத்தில் அல்லு அர்ஜுனின் வித்தியாசமான தோற்றத்தையும் ‘புஷ்பா எங்கே?’ என்ற மாஸான கான்செப்ட் டீசரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட…

Read More

IPL 2023 | சேப்பாக்கத்தில் இன்று மோதல்: ஜாஸ் பட்லர், ஜெய்ஸ்வால் அதிரடி சிஎஸ்கேவிடம் எடுபடுமா

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதுகிறது. சுழலுக்கு சாதகமான சேப்பாக்கம் ஆடுகளத்தில் சிறந்த பார்மில் உள்ள ராஜஸ்தான் அணியின் தொடக்க ஜோடியான யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜாஸ் பட்லர் ஆகியோர் கடும் சோதனைகளை எதிர்கொள்ளக்கூடும். ஏனெனில் சிஎஸ்கே அணியில் உலகத்தரம்வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் இந்த ஜோடிக்கு நெருக்கடி தரக்கூடும் என…

Read More

‘டிட்டராக’ மாறிய ட்விட்டர்

கடந்த ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க் அங்கு பணியாற்றிய 50 சதவீதக்கு மேற்பட்டவர்களை நீக்கினார். இது தவிர, ட்விட்டரின் நீல நிறக் குருவி லோகோவுக்குப் பதிலாக, டாக்காயின் கிரிப்டோ கரன்ஸி நிறுவனத்தின் நாய் லோகோவை மாற்றினார். இது விமர்சிக்கப்பட்டதால் மீண்டும் நீல நிறக் குருவியை ட்விட்டர் லோகோவாக அவர் மாற்றினார். தற்போது அமெரிக்காவில் சான் பிரான்ஸிஸ்கோவில் உள்ள ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை அலுவலக கட்டிடத்தில் பொறிக்கப்பட்டுள்ள ட்விட்டர் பெயர்ப் பலகையில் ‘டபிள்யூ’ எழுத்தை மறைத்துள்ளார்….

Read More

பாகிஸ்தானை விட இந்தியாவில் முஸ்லிம்கள் பாதுகாப்பாக உள்ளனர்: நிர்மலா சீதாராமன் பதில்

பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம்களை விட இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் ஒருவாரம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர் உலக வங்கி மற்றும் சர்வதேச செலாவணி நிதிய கூட்டங்களில் பங்கேற்க உள்ளார். இதனிடையே பீட்டர்சன் இன்ஸ்டிடியூட் ஃபார் இண்டர்நேஷனல் எகனாமிக்ஸ் (பிஐஐஇ) தலைவர் ஆதம் எஸ் போஸன் எழுப்பிய கேள்விக்கு நிதியமைச்சர் அளித்த பதில். பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம்களை விட இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளனர்….

Read More

அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனத்திற்கு 5 கோடி ரூபா நஷ்டம்

அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 50 அரச மருந்தக நிலையகங்களின் (ஒசுசல)  26 இல் தேவையற்ற செலவுகள் அடங்கலாக பல்வேறு காரணங்களால் 2021 ஆம் ஆண்டில் 5 கோடியே 32 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் குறிப்பிடுகின்றது. தேசிய கணக்காய்வு அலுவலகம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இரத்தினபுரி, ஸ்ரீ ஜயவர்தனபுர , பண்டாரகம மற்றும் மொனராகலை ஆகிய நான்கு  அரச மருந்தகங்களில்  2020 ஆம் ஆண்டு, இலாபம் ஈட்டி இருந்த நிலையில்,…

Read More