உக்ரைன் படைவீரரின் தலையை துண்டிக்கும் ரஷ்ய இராணுவம் – அதிர்ச்சி வீடியோ

உக்ரைனின் படைவீரர் ஒருவரின் தலையை ரஸ்ய படையினர் துண்டிப்பதை காண்பிக்கும்  அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. கையடக்கத்தொலைபேசியில் பதிவு செய்யப்பட்ட மிகவும் அச்சத்தை ஏற்படுத்திய கொடுரமான வீடியோவொன்று வெளியாகியுள்ளது. அந்தவீடியோவில் உக்ரைன் இராணுவீரர்கள் அணியும் மஞ்சள் கைப்பட்டி அணிந்த ஒருவர் காணப்படுகின்றார்,அதேவேளை காலில் வெள்ளை நிற பட்டியணிந்தவர்களும் காணப்படுகின்றனர் – ரஸ்ய படையி;னர் காலில் வெள்ளை பட்டி அணிவது வழமை  அவர்கள் ரஸ்ய மொழியில் உரையாடுகின்றனர். பின்னர் கையில்பாரிய கத்தியை வைத்திருக்கும் காலில் வெள்ளை பட்டி அணிந்த நபர்…

Read More

பெரும் சூறாவளி அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் மேற்கு அவுஸ்திரேலியா

மேற்கு அவுஸ்திரேலியாவை பெரும் சூறாவளி தாக்கும் ஆபத்து உருவாகியுள்ளது இல்சா சூறாவளி இன்றிரவு அல்லது நாளை காலை மேற்கு அவுஸ்திரேலியாவின் போர்ட் ஹெட்லாண்ட் வலல் டவுன்ஸ் பகுதிகளிற்கு இடையில் கரையை கடக்கும் மிகவும் ஆபத்தானதாக மாறலாம்  category 5 என எச்சரிக்கைகள் வெளியாகியுள்ளன. தற்போது தென்பகுதியை நோக்கி நகர்ந்துகொண்டுள்ளcategory 4  இல்சா தென்கிழக்கு பகுதியை நோக்கி நகர்ந்து மேலும் வேகமானதாக மாறும்  என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 14 வருடங்களில் மேற்கு அவுஸ்திரேலியாவை தாக்கிய மிகவும் ஆபத்தான சூறாவளியாக இது…

Read More

மீன் வலையில் சிக்கி 3 பிள்ளைகளின் தந்தை பலி

மீன் பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் வலைக்குள் சிக்கி மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு – சந்திவெளி ஆற்றில் நேற்றிரவு (12) மீன்பிடிக்கச் சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தையான சந்திவெளி, வட்டையார் வீதியைச் 43 வயதுடைய கந்தையா பவானந்தன் என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார். மீன்பிடிக்க சென்ற நபரை காணவில்லை என்று இன்று (13) காலை அவரது பிள்ளைகள் தோணியொன்றில் சென்று தேடியபோது, தோணியிலிருந்து வலை வீசும் போது தவறி விழுந்து வலைக்குள் சிக்குண்டு அதிலிருந்து மீளமுடியாமல் நீரில் மூழ்கி…

Read More

இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவர் லிங்குசாமி. இவர் அடுத்ததாக பையா 2 படத்தை இயக்க போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இயக்குனர் லிங்குசாமிக்கு செக் மோசடி வழக்கில் விதிக்கப்பட்டிருந்த 6 மாத கால சிறை தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு கார்த்தி மற்றும் சமந்தாவை வைத்து லிங்குசாமி இயக்குவதாக இருந்த திரைப்படம் தான் எண்ணி ஏழு நாள். இப்படத்திற்காக வாங்கிய கடன் ரூ.1 கோடியே 3 லட்சத்தை, லிங்குசாமி திரும்ப…

Read More

சீனாவுக்கு இலங்கை குரங்குகள் எதற்கு?

இலங்கையில் இருந்து 100,000 குரங்குகளை சீனாவுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் குறித்து சுற்றுச்சூழல் அமைப்பு ஒன்று இன்று (12) தனது கருத்தை வெளியிட்டுள்ளது. அங்கு உரையாற்றிய சுற்றுச்சூழல் ஆர்வலர் சட்டத்தரணி ஜகத் குணவர்தன, “விலங்கு ஒன்று வேறு நாடுகளுக்கு அனுப்பு முடியும், பாதுகாப்பு நோக்கங்களுக்காக அல்லது மிருகக்காட்சிசாலைக்காக மட்டுமே ஆகும்.” “எனவே, இறைச்சிக்காகவோ அல்லது அறிவியல் ஆராய்ச்சிக்காகவோ இலங்கையில் இருந்து விலங்குகளையோ அல்லது விலங்கின் பகுதிகளையே ஏற்றுமதி செய்வது முற்றிலும் சட்டவிரோதமானது.” “சீனா இலங்கை குரங்குகளை கேட்கிறது என்றால்,…

Read More

இலங்கை கால்பந்து அணி குறித்து FIFA அதிரடி அறிவிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க இலங்கை ஆண்கள் தேசிய கால்பந்து அணி தகுதி இழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கு சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) இதனை அறிவித்துள்ளது. முன்னதாக இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் உறுப்புரிமையை சர்வதேச கால்பந்து சம்மேளனம் தற்காலிகமாக ரத்துச் செய்த காரணமாக இலங்கை கால்பந்து அணிக்கு ஆசிய தகுதிச் சுற்று மற்றும் U23 ஆசிய கோப்பை தகுதிச் சுற்றுகளில் பங்கேற்க முடியாத காரணத்தால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Read More

H3N8 பறவைக் காய்ச்சலுக்கு சீனாவில் உலகின் முதல் உயிரிழப்பு: உலக சுகாதார நிறுவனம்

H3N8 என்ற வகை பறவைக் காய்ச்சலால் சீன பெண் ஒருவர் பலியாகி இருப்பதாகவும், இதுவே இவ்வகை பறவைக் காய்ச்சலுக்கு உலகின் முதல் உயிரிழப்பு என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட தகவலில், “H3N8 என்ற வகை பறவைக் காய்ச்சலுக்கு சீன பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்த வகை பறவைக் காய்ச்சலுக்கு மனிதர்கள் பலியாவது இதுதான் முதல் முறை. H3N8 வகை பறவைக் காய்ச்சலால் சீனாவில் இதுவரை மூன்று பேர்…

Read More

போராட்டத்தில் ஈடுபடுவோர் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படுவர் -திஸ்ஸ விதாரண

உத்தேச பயங்கரவாத  எதிர்ப்பு சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தவுடன் உயர்நீதிமன்றத்தை நாடுவோம். திருத்தங்கள் இல்லாமல் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் ஜனநாயக போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் அனைவரும் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படுவார்கள் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். கொழும்பில்இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம் 1979 ஆம் ஆண்டு தற்காலிக ஏற்பாடாக கொண்டு வரப்பட்டது. பயங்கரவாதவாத தடைச்சட்டத்தின் பெரும்பாலான ஏற்பாடுகள்…

Read More

43 ஆயிரம் மாணவிகள் கர்ப்பம்: தான்சானியா பள்ளியில் அதிர்ச்சி

தான்சானியா நாட்டின் தலைநகர் டோடோமாவில் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் கடந்த 2021-2022ம் ஆண்டுக்கான சிஏஜி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையின்படி, கடந்த 2021ம் ஆண்டு ஜூலை முதல் 2022 ஜூன் மாதத்திற்கு இடைப்பட்ட ஓராண்டில் நாடு முழுவதும் 42,954 மாணவிகள் கர்ப்பமான நிலையில், பள்ளியை விட்டு இடைநின்றனர். அவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வரவில்லை. கருவுற்ற 42,954 பள்ளி மாணவிகளில் 23,009 பேர் மேல்நிலைப் பள்ளிகளையும், 19,945 தொடக்கப் பள்ளிகளையும் சேர்ந்தவர்கள் ஆவர். 2021ம் ஆண்டில் மட்டும்…

Read More

மியான்மரில் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் பலி; ஐ.நா. கடும் கண்டனம்

மியான்மர் : மியான்மரில் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 100த்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மியான்மரில் கடந்த 1.5 ஆண்டுகளுக்கு மேலாக ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. போராளிகள் குழு மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வரும் ராணுவம், அப்பாவி பொது மக்களை கொன்று குவித்து வருவது சர்வதேச அரங்கில் தொடர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மனித உரிமைகள் ஆணையமும் பலமுறை தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. ஆனால் தாக்குதல் சம்பவங்களுக்கு போராளி குழுக்களே…

Read More