இந்தியா – இலங்கை பயணியர் படகு சேவை; துறைமுக விரிவாக்க பணியில் கடற்படை
காங்கேசன்துறை துறைமுக உட்கட்டமைப்பு விரிவாக்கப் பணிகளில், இலங்கை கடற்படை இணைந்துள்ளது. இலங்கையின் யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து, நம் நாட்டின் துச்சேரியின் காரைக்கால் வரை, பயணியர் படகு போக்குவரத்து சேவை இம்மாத இறுதியில் துவங்க உள்ளது.இதன் வாயிலாக, காரைக்காலுக்கு இலங்கையில் இருந்து நான்கு மணி நேரத்தில் சென்றடையலாம். இந்நிலையில், காங்கேசன்துறை துறைமுக உட்கட்டமைப்பு விரிவாக்கப் பணிகளில், இலங்கை கடற்படை இணைந்து உள்ளது.

