இலங்கைக்கு மற்றுமொரு பதக்கம்

2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப் போட்டியில் அயோமல் அகலங்க வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். இதேவேளை, உஸ்பெகிஸ்தானில் இடம்பெற்றுவரும் இப் போட்டிகளில் நேற்றைய தினம் உயரம் தாண்டுதல் போட்டியில் நிலுபுல் பெஹெசர வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன்போது, பெஹெசர 2.01 மீற்றர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். அதேபோல், பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் கசுனி நிர்மலி விக்ரமசிங்க வெண்கலப் பதக்கத்தை வென்றமை…

Read More

செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை ஊக்குவிக்க ஜனாதிபதி செயலணி

நாட்டில் செயற்கை நுண்ணறிவு பாவனையை ஊக்குவிப்பதற்காக துறைசார் நிபுணர்கள் அடங்கிய ஜனாதிபதி செயலணியொன்றை பெயரிட்டு அவர்களின் விபரங்களை சமர்ப்பிக்குமாறும், அது தொடர்பான கோட்பாட்டு ஆவணமொன்றை (Concept Paper) தயாரிக்குமாறும் தொழில்நுட்ப அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். நாட்டின் அபிவிருத்திக்கு செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பில் அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் நடந்த கலந்துரையாடலில் ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். விவசாயம், கல்வி, சுகாதாரம், மீன்பிடி மற்றும் கைத்தொழில் உள்ளிட்ட…

Read More

840,000 அமெரிக்க டொலர்கள் மோசடி: இலங்கை மருத்துவருக்கு அமெரிக்காவில் 4 வருட சிறை

அமெரிக்காவின் ஸ்ட்ராட்ஃபோர்ட் நகரில் மருத்துவ நிலையம் ஒன்றை நடத்தி வந்த இலங்கை மருத்துவர் ஒருவர், சுகாதார சேவைகளை வழங்குவதாக தெரிவித்து  அந்நாட்டு அரசாங்கத்திடமிருந்து சுமார் 840,000 அமெரிக்க டொலர்களை பெற்று, மோசடி செய்த குற்றத்துக்காக அவருக்கு பிரிட்ஜ்போர்ட்  நீதிமன்றமொன்று நான்கு வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. இலங்கையைச் சேர்ந்த குறித்த மருத்துவர் கடந்த நவம்பரில் மோசடி குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதால் தண்டனை நிலுவையில்  பிணையில் விடுவிக்கப்பட்டார். மெடிகெயார் என்ற மருத்துவ கிளினிக்கின் உரிமையாளரும் தலைவருமான இவர், தனது மருத்துவமனைக்கு வரும்…

Read More

பொதுமக்கள் சுதந்திரமாக வந்துசெல்ல வேண்டும் : நீதிமன்ற கட்டளை அதுவே என்கிறார் சுமந்திரன்

நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் வெடுக்குநாறி மலைக்கு பொதுமக்கள் சுதந்திரமாக வந்துசெல்ல வேண்டும் அதனை மதித்து அரச உத்தியோகத்தர்கள் செயற்படவேண்டும் என்று யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார். வெடுக்குநாறி மலைக்கு ஞாயிற்றுக்கிழமை (30) விஜயம் செய்த அவர் ஆதி இலிங்கேஸ்வரர் ஆலயத்தினை பார்வையிட்டார். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், வெடுக்குநாறிமலையில் விக்கிரகங்கள் உடைக்கப்பட்ட பின்னர். கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் பிரதிஸ்டை செய்யப்பட்டிருக்கின்றது.  இந்த ஆலயம்…

Read More

மஹிந்தவை மீண்டும் பிரதமராக்க முயற்சி – முஜிபுர் தகவல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதன் மே தினக் கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிப்பதற்கான யோசனையை முன்வைக்கவுள்ளது. ராஜபக்ஷர்களை மீண்டும் பதவிகளில் அமர்த்துவதற்காகவே இவ்வாறான முயற்சிகள் இடம்பெறுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாநகர மேயர் வேட்பாளர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்துக்கு பொதுஜன பெரமுனவினர் வழங்கிய வாக்குகள் பெறுமதியற்றவை…

Read More

பௌசிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதித் திட்ட ஏற்பாடுகள் மீதான வாக்கெடுப்பின் போது , ஆதரவாக தனது வாக்கினைப் பதிவு செய்த பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. 6 பிரதான காரணிகளை முன்வைத்து குறித்த வாக்களிப்பில் கலந்து கொள்ளாமலிருப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்திருந்தது. எவ்வாறிருப்பினும் கட்சியின் தீர்மானத்துக்கு முரணாக அவர் வாக்களித்துள்ளமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

இலங்கை வரலாற்றை ஆய்வு செய்வதற்காகவிரைவில் புதிய நிறுவனம் – ஜனாதிபதி

இலங்கையின் வரலாற்றை ஆய்வு செய்வதற்காக புதிய நிறுவனம் ஒன்று விரைவில் ஸ்தாபிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தேசிய அருங்காட்சியகம், ஆவணக் காப்பகத் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம், கலாசார முக்கோணம், பல்கலைக்கழகங்கள் மற்றும் றோயல் ஆசிய சங்கம் என்பனவற்றை இணைத்து நிறுவி, அதற்கான சட்ட வரைவை நிறைவு செய்வதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்ற றோயல் ஆசிய சங்கத்தின் 178 ஆவது கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்டு…

Read More

ரணில் வீடு எரிப்பு: ஸ்ரீரங்கா சந்தேகநபர்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சொந்த வீட்டை எரித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெ. ஸ்ரீ ரங்காவை குற்றப்புலனாய்வு பிரிவினர் சந்தேகநபராக பெயர் குறிப்பிட்டுள்ளனர்.  இதற்கமைய, ஜெ. ஸ்ரீரங்காவை எதிர்வரும் மே மாதம் 3ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவு பிறப்பித்துள்ளார். இதேவேளை, கடந்த 2011 ஆம் ஆண்டு வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டில் பேரில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்…

Read More

கிழக்கு லடாக் எல்லையில் படைகளை திரும்ப பெறாதவரை இந்தியா – சீனா இடையே சுமுக உறவு ஏற்படாது: ராஜ்நாத் சிங்

இந்தியா-சீனா எல்லையில் சீனா ராணுவம் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் அத்துமீறியது முதல், இரு நாடுகளும், கிழக்கு லடாக் எல்லையில் சுமார் 50,000 ராணுவ வீரர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளன. இரு தரப்பும் போருக்கு தயார் நிலையில் இருக்கும் சூழ்நிலை அங்கு நிலவுகிறது. இந்த சூழ்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்க சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜெனரல் லீ ஷாங்ஃபு டெல்லி வந்துள்ளார். அவரை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்…

Read More

50 விக்கெட் வீழ்த்தி இலங்கை வீரர் ஜெயசூர்யா சாதனை

இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான பிரபாத் ஜெயசூர்யா விரைவாக 50 விக்கெட்களை வீழ்த்தி 72 ஆண்டுகள் சாதனையை முறியடித்துள்ளார். இடது கை சுழற்பந்து வீச்சாளரான பிரபாத் ஜெயசூர்யா இந்த மைல் கல் சாதனையை காலேவில் நடைபெற்று வந்த அயர்லாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளான நேற்று நிகழ்த்தினார். அயர்லாந்து பேட்ஸ்மேன் பால் ஸ்டிர்லிங்கை ஆட்டமிழக்கச் செய்த போது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் விரைவாக 50 விக்கெட்களை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற…

Read More