‘தொலைநோக்கு பார்வை கொண்டவர்’ – பிரதமர் மோடிக்கு அமெரிக்க அமைச்சர் புகழாரம்

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசியபோது அவர் நம்ப முடியாத அளவுக்கு தொலைநோக்குப் பார்வை கொண்டவராக விளங்கினார் என்று அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சர் ஜினா ரைமண்டோ புகழ்ந்துள்ளார். இதுகுறித்து ஜினா ரைமண்டோ மேலும் கூறியுள்ளதாவது. கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடியை நான் சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்தது. இருவரும் சுமார் ஒன்றரை மணி நேரம் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினோம். அப்போது அவரிடம் நம்ப முடியாத அளவுக்கு தொலைநோக்கு பார்வை இருந்தது. இந்தியாவை உலக…

Read More

இலங்கையில் சீனாவின் உதவியுடன் செய்மதி தளம் – இந்தியா கவலை

சீனாவின் உதவியுடன் இலங்கையில் ராடார் தளத்தை அமைப்பதற்கான முயற்சிகள்  குறித்தும் மியன்மாரில் இராணுவதளமொன்றை அமைப்பதற்கு சீனாஉதவுவது குறித்தும்  இந்தியா கரிசனை கொண்டுள்ளது என இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது. மியன்மாரின் கொக்கோ தீவுகளில்இராணுவதளமொன்று உருவாக்கப்படுவதும்  இலங்கையில் முன்மொழியப்பட்டுள்ள தொலைதூர செயற்கை கோள் தரவுகளை பெறும் நிலையமும் பிராந்தியத்தில் சீனாவின் கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்த கரிசனையை இந்தியாவிற்கு ஏற்படுத்தியுள்ளன என இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது. இராணுவதளமும்  தொலைதூர செய்மதி நிலையமும் சீனாவின் உதவியுடனேயே நிர்மாணிக்கப்படுவதாக இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது. இந்தியாவின்…

Read More

யாழில் உண்ணாநோன்புப் போராட்டம்

“தமிழர் எம் மரபுரிமைகள் பாதுகாப்போம் “ என்ற தொனிப்பொருளில் அடையாள உண்ணாநோன்புப் போராட்டமும் தமிழர் தாயகம் தழுவிய மாபெரும் கையெழுத்துப்போரும் இன்று ஞாயிற்றுக்கிழமை நல்லூர் நல்லை ஆதீன முன்றலில் இடம்பெறுகின்றது. 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சமயத்தலைவர்கள், தமிழ் தேசிய அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், பல்கலைக்கழக சமூகத்தினர் என பலருடைய பாரிய ஒத்துழைப்புடன் இந்த அடையாள உண்ணாநோன்புப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. தமிழர் மரபுரிமைகளை அழியவிடாது பாதுக்காக குறித்த எழுச்சிப்போராட்டத்தில் பேதங்களை கடந்து தமிழராக அனைவரும்…

Read More

DJ இசைநிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு

காலி, தடெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். நேற்று (15) இரவு இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 36 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். தடல்ல பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் பின்னர் இரவு வேளையில் இடம்பெற்ற டீஜே இசையை பார்த்துக் கொண்டிருந்தவர்களை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு இரண்டு சந்தேகநபர்கள் வந்துள்ளதாகவும், சட்டவிரோத மதுபான வியாபாரம் தொடர்பாக உயிரிழந்தவருக்கும் சந்தேகநபர்களுக்கும் இடையில்…

Read More

பாரிய அளவிலான போதைப் பொருட்களுடன் 6 பேர் கைது

இலங்கைக்கு தெற்கே சர்வதேச கடற்பரப்பில் பாரிய அளவிலான போதைப் பொருட்களுடன் 6 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் இலங்கை கடற்படை, பொலிஸ் மற்றும் புலனாய்வு அமைப்புகளின் கூட்டு நடவடிக்கையின் போது குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது சந்தேகநபர்கள் பயன்படுத்திய பல நாள் மீன்பிடிக் கப்பலும் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

Read More

சமந்தாவின் ‘சாகுந்தலம்’ முதல் நாளில் ரூ.5 கோடி வசூல்

சமந்தா நடிப்பில் வெளியாகியுள்ள ‘சாகுந்தலம்’ திரைப்படம் முதல் நாள் 5 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் குணசேகர் இயக்கத்தில் சமந்தா நடிப்பில் நேற்று (ஏப்ரல் 14) திரையரங்குகளில் வெளியான படம் ‘சாகுந்தலம்’. மலையாள நடிகர் தேவ் மோகன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் அதிதிபாலன், கவுதமி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மணிசர்மா இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் உருவான இப்படம் ரசிகர்களிடையே பெரும்பாலும் எதிர்மறை விமர்சனங்களையே…

Read More

ஜூனில் வெளியாகிறது சமுத்திரக்கனியின் ‘விமானம்’

ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் கே.கே. கிரியேட்டிவ் ஒர்க்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம், ‘விமானம்’. தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள இதில் சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடிக்கிறார். சிவபிரசாத் யானலா இயக்கியுள்ளார். மாஸ்டர் துருவன், மீரா ஜாஸ்மின், ராஜேந்திரன், அனுசுயா பரத்வாஜ், ராகுல் ராமகிருஷ்ணா, தன்ராஜ் உட்பட பலர் நடித்துள்ளனர். விவேக் கலேபு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்துக்கு சரண் அர்ஜுன் இசையமைத்துள்ளார். ஜூன் 9-ல் வெளியாகும் இதன் முதல் தோற்றக் காணொலியை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது. விமானத்தில் பறக்க…

Read More

IPL 2023 | 5-வது தோல்வியை சந்தித்தது டெல்லி

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது டெல்லி கேபிடல்ஸ் அணி. அந்த அணி தொடர்ச்சியாக சந்தித்த 5-வது தோல்வி இதுவாகும். பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பீல்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த பெங்களூரு அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 174 ரன்கள் குவித்தது. தனது…

Read More

பூமிக்கு வருகிறது விண்வெளியில் விளைவிக்கப்பட்ட தக்காளி

விண்வெளியில் விளைவிக்கப்பட்ட தக்காளி பிரத்யேக விண்கலம் மூலம் பூமிக்கு கொண்டுவரப்படுவதாக அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா தெரிவித்துள்ளது. இது இன்று பூமியை அடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் விண்வெளியில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தும் நோக்கில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. பிற கிரகங்களில் மனிதர்கள் வாழும் சாத்தியக்கூறுகள் தொடங்கி அந்த கோள்களில் நீர் உள்ளதா என்பது வரையில் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியேற்றும் ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகிறது….

Read More

அதிகாரத்துக்கான யுத்தம்: சூடான் நாட்டில் நடப்பது என்ன?

அதிகார வேட்கைதான் எல்லா யுத்தங்களின் அடிப்படையாக இருந்திருக்கிறது. இன்றளவும் அப்படித்தான். கிழக்கு ஆப்பிரிக்காவின் ஒரு குட்டி நாடான சூடானில் அதிகாரத்தைக் கைப்பற்றுவது யார் என்பதற்காக ஒரு நீண்ட யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. அது அவ்வப்போது கலவரமாக வெடிப்பதும் பின்னர் கனன்று கொண்டிருப்பதாகவும் இருக்கிறது. சூடான் யுத்தம் இரு நாடுகளுக்கு இடையே அல்ல சொந்த மக்களுக்குள் நடக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களுக்கும் ராணுவத்துக்கும் இடையே நடக்கிறது. ராணுவத்துக்கும், அதன் கிளையான துணை ராணுவத்திற்கும் இடையே நடக்கிறது. இத்தனையும் ஆட்சி அதிகாரத்திற்காக…

Read More