TID க்கு அழைக்கப்பட்ட முன்னாள் சட்டமா அதிபர்

முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவை, பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு (TID) நாளை (19) ஆஜராகுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின்னணியில் இடம்பெற்ற சதிப்புரட்சி குறித்த அவரது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெறவே முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

Read More

இன,மத, மொழி, கட்சி வேறுபாடின்றி பேரணியில் கலந்துகொள்ள பேராயர் அழைப்பு

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்களின் உண்மைத் தன்மையை கண்டறிந்து, மிலேச்சத்தனமான செயலை செய்த சூத்திரதாரிகள் மற்றும் குற்றவாளிகளை சட்டத்திற்கு முன் கொண்டுவர வேண்டும். அவ்வாறு செய்யாதுபோனால்,  சுதந்திரமாகவும், அரசியல் பாதுகாப்புடன் பல்வேறு சலுகைகளையும் அனுபவித்து வருபவர்கள் இது போன்ற இன்னும் பல குற்றங்களை செய்வதற்கு தயங்க மாட்டார்கள் என கொழும்பு மறை மாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்று 4 ஆண்டுகளாகிறது. எவ்வளவு…

Read More

3 நாட்களில் ருத்ரன் படம் செய்த வசூல்

ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் ருத்ரன். இப்படத்தை தயாரித்து இயக்கியிருந்தார் கதிரேசன். இப்படத்தில் முதல் முறையாக ராகவா லாரன்ஸுடன் இணைந்து பிரியா பவானி ஷங்கர் நடித்திருந்தார். மேலும் சரத்குமார் வில்லனாக நடிக்க, பூர்ணிமா பாக்கியராஜ் மற்றும் நாசர், காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். வசூல் முதல் நாளில் இருந்து கலவையான விமர்சனங்களை பெற்று வரும் இப்படம் கடந்த மூன்று நாட்களில் ரூ. 15 கோடி வரை வசூல் செய்துள்ளது என தகவல்…

Read More

சுதந்திரமடைந்து 75 ஆவது வருடத்தில் ‘தோல்வியடைந்த அரசாக’ இலங்கை – சந்திரிக்கா

இலங்கை கடந்த 1948 ஆம் ஆண்டில் சுதந்திரமடைந்தபோது வரவேற்கத்தக்க பல்வேறு சமூகக்காரணிகள் தென்பட்ட போதிலும், சுதந்திரமடைந்து 75 ஆவது வருடத்தில் இலங்கை ஓர் ‘தோல்வியடைந்த அரசாக’ மாறியுள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். ‘ஒரு நாடு குறிப்பிடத்தக்களவிலான முன்னேற்றத்தை அடைந்துகொள்வதற்கு 75 வருடங்கள் என்பது மிகநீண்டகாலமாகும். அந்தவகையில் காலனித்துவ ஆட்சியாளர்கள் சுமார் 450 வருடங்களாக நாட்டை சீரழித்த பின்னரும்கூட, இலங்கை சுதந்திரமடைந்தபோது பெரிதும் வரவேற்கத்தக்கவாறான பல்வேறு சமூக – பொருளாதாரக்காரணிகள் தென்பட்டன.  ஆனால்…

Read More

2024 ஆம் ஆண்டுக்கு முன் ஜனாதிபதி தேர்தல் – ஜி.எல்.பீரிஸ்

2024 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்காக நடைமுறையில் உள்ள தேர்தல் சட்டத்தை திருத்தம் செய்ய அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது.எந்த தேர்தல் இடம்பெற்றாலும் அரசாங்கம் படுதோல்வி அடையும் என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, நாட்டில் ஸ்திரமான அரசாங்கம் ஒன்று கிடையாது.தேர்தல் ஒன்று இடம்பெற்றால் அரசாங்கம் படுதோல்வி…

Read More

இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையில் மூலோபாய பேச்சுவார்த்தை

இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையில் இன்று (18) மூலோபாய பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. லண்டனில் உள்ள வெளிநாட்டு பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தில் நடைபெறவுள்ள கலந்துரையாடலில் வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன பங்கேற்கவுள்ளார். ஐக்கிய இராச்சியத்திற்கும் இலங்கைக்கும் இடையில் வெளிவிவகார செயலாளர் மட்டத்தில் இடம்பெறும் முதலாவது மூலோபாய உரையாடல் இதுவாகும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்ட 75 ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி இந்த…

Read More

இலங்கையர்கள் இருவருக்கு இந்தியாவில் கொவிட்

இலங்கையில் இருந்து இந்தியா சென்ற 2 பேருக்கு கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த 2 பேரும் தமிழகம் சென்றிருந்த போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக ´த ஹிந்து´ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருவதோடு, மேலும் திங்கட்கிழமை கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 60,313 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இந்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Read More

 ஐபிஎல் நடத்தை விதிகளை மீறிய கோலி: 10% அபராதம் விதிப்பு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் நடத்தை விதிகளை மீறியதற்காக ஆர்சிபி வீரர் கோலிக்கு 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் பெங்களூரு அணி தோல்வியை தழுவிய நிலையில் ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. கோலி களத்தில் ஆக்ரோஷத்துடன் இயங்குபவர். அண்மைக் காலமாக மிகவும் அமைதியாக இருந்து வருகிறார். இந்தச் சூழலில் பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் சென்னை அணிக்கு எதிராக ஃபீல்ட் செய்த போது 27 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து விக்கெட்டை…

Read More

மலேசிய நீச்சல் போட்டி: வேதாந்த் 5 தங்கம் வென்று அசத்தல்

நடிகர் மாதவனின் மகன் வேதாந்த், மலேசியாவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் 5 தங்கப் பதக்கங்கள் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் மலேசியன் இன்விடேஷனல் சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டி நடைபெற்றது. கடந்த 13ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடைபெற்ற இந்த தொடரில் பல்வேறு வயதினருக்கான பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் நடிகர் மாதவனின் மகனான வேதாந்த் 50 மீட்டர், 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் மற்றும் 1500 மீட்டர்…

Read More

சூடானில் வலுக்கும் கலவரம் | 185 பேர் படுகொலை; 1800 பேர் காயம்

சூடான் நாட்டில் ராணுவத்திற்கும் துணை ராணுவப் படைக்கும் இடையே நடக்கும் மோதல் காரணமாக அங்கே இதுவரை 185 பேர் உயிரிழந்துள்ளனர். 1800 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் அப்பாவி பொதுமக்கள் எனத் தெரியவந்துள்ளது. மேலும், கலவரக்காரர்கள் மருத்துவமனைகள் சூறையாடியதால் மருந்து தட்டுப்பாடும் நிலவுகிறது. ஏற்கெனவே அங்கே உணவுத் தட்டுப்பாடு நிலவும் சூழலில் இந்தக் கலவரம் காரணமாக நிலவரம் இன்னும் மோசமடைந்துள்ளது. அதிகாரத்துக்கான மோதல்: சூடான் ராணுவத் தளபதி அப்தல் ஃபத்தா அல் புர்ஹானுக்கும் துணை ராணுவப் படை தளபதி…

Read More