இலங்கையிலிருந்து குரங்குகளை ஏற்றுமதி செய்ய திட்டமா- மறுக்கின்றது சீன தூதரகம்

சீனாவிற்கு இலங்கையிலிருந்து குரங்களை ஏற்றுமதி செய்யும் திட்டம் குறித்து தான் எதனையும் அறிந்திருக்கவில்லை என இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது. சீனாவில் உள்ள அதிகாரிகளுடன் இது குறித்து ஆராய்ந்துள்ளதாக தெரிவித்துள்ள சீன தூதரகம் சீனாவின் தேசிய வனவியல் மற்றும் புல்வெளி நிர்வாகம் இதனை நிராகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. சீனா அழிந்துவரும் வனவிலங்குகள் மற்றும் தாவரங்களின் சர்வதேச வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது என தெரிவித்துள்ள  சீன தூதரகம் 1988 இல் சீனா தனது வனவிலங்கு சட்டத்தினை ஏற்கனவே ஏற்றுக்கொண்டுள்ளது…

Read More

‘இளம் பந்து வீச்சாளர்களை கையாள்வது சவால்’ – தோனி

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சிஎஸ்கே 6 விக்கெட்கள் இழப்புக்கு 226 ரன்கள் குவித்தது. டேவன் கான்வே 45 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 83 ரன்களையும் ஷிவம் துபே 27 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 52…

Read More

பட்ஜெட் 65 கோடி – இதுவரை வசூல் 6 கோடி – ‘சாகுந்தலம்’

சமந்தா நடித்துள்ள ‘சாகுந்தலம்’ திரைப்படம் ரூ.65 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட நிலையில், 4 நாட்கள் முடிவில் படம் வெறும் ரூ.6.25 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் குணசேகர் இயக்கத்தில் சமந்தா நடிப்பில் ஏப்ரல் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘சாகுந்தலம்’. மலையாள நடிகர் தேவ் மோகன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் அதிதிபாலன், கவுதமி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மணிசர்மா இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில்…

Read More

துபாயில் ஷாம்லியின் ‘ஓவிய கண்காட்சி’

சிறந்த நடிப்பிற்காகத் தேசிய விருதைப் பெற்றவர் பேபி ஷாம்லி. குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ள அவர், ‘ஒய்’ என்ற தெலுங்கு படத்தில் சித்தார்த் ஜோடியாக நாயகியாக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து தமிழில் ‘வீரசிவாஜி’ படத்திலும் நடித்தார். மலையாளத்திலும் நடித்து வரும் அவர் ஓவியம், நாட்டியத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். அவர் ஓவியத்தில் இடம்பெற்றிருக்கும் பெண்கள், சமூக தளைகளிலிருந்து விடுபட்டு, இலட்சியம் நோக்கி நகரும் வகையில் வரையப்பட்டுள்ளது. அவர் தான் வரைந்த ஓவியங்களைக் கொண்டு, சென்னை, பெங்களூரில்…

Read More

நியூசிலாந்து விமானியை சிறைப்பிடித்த இந்தோனேசிய கிளர்ச்சியாளர்கள்: மோதலில் 13 இராணுவ வீரர்கள் பலி

இந்தோனேசியாவில் பிரிவினைவாத கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருக்கும் நியூசிலாந்து விமான விமானியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட அந்நாட்டு இராணுவத்தினர் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தோனேசியா கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு பப்புவாவில் கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது அரசுக்கு எதிராக தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தோனேசியாவிடமிருந்து தங்களுக்கு விடுதலை வேண்டும் என்ற கோரிக்கையை நீண்ட நாட்களாக வைத்து வருகின்றனர். இந்த கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதற்காக பல்வேறு தீவிர நடவடிக்கைகளை இந்தோனேசிய அரசும் எடுத்து வருகிறது. இந்த நிலையில் நியூசிலாந்தை சேர்ந்த பிலிப் என்ற…

Read More

அன்னபூர்ணா மலைச்சிகரத்தில் காணாமல் போன வீராங்கனை உயிருடன் மீட்பு

அன்னபூர்ணா மலைச்சிகரத்தில் ஏறும்போது காணாமல் போன மலையேற்ற வீராங்கனை உயிருடன் மீட்கப்பட்டார். இமய மலை அடிவாரத்தில் இருக்கும் நேபாள நாட்டில் ஏராளமான மலைப் பகுதிகள் உள்ளன. இங்குள்ள மலைப் பகுதிகளில் மலையேற்ற சாகச வீரர், வீராங்கனைகள் ஏராளமானோர் மலையேறி செல்வதுண்டு. அந்த வகையில், இந்தியாவை சேர்ந்த மலையேற்ற வீராங்கனை பல்ஜீத் கவுர் நேபாளத்தில் அண்மையில் மலையேறிச் செல்லும் சாகச நிகழ்ச்சியில் பங்கேற்றார். இவர், இமயமலையின் 10-வது சிகரமான அன்னபூர்ணா மலையை சென்றடைய திட்டமிட்டு இருந்தார். ஆனால் அவர்…

Read More

மக்கள் தொகையில் இந்தியா இந்த ஆண்டு சீனாவை பின்னுக்குத் தள்ளும்: ஐ.நா

 மக்கள் தொகையில் முதலிடத்தில் இருக்கும் சீனாவை, இந்தியா இந்த ஆண்டு பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடிக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. உலக மக்கள் தொகை நிலை – 2023 அறிக்கையை ஐ.நா.வின் மக்கள் தொகை நிதியம் இன்று வெளியிட்டுள்ளது. அதில் உலகில் மக்கள் தொகை வளர்ச்சி எவ்வாறு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ”மக்கள் தொகையில் இந்தியா, இந்த ஆண்டு சீனாவை பின்னுக்குத் தள்ளும். இந்த ஆண்டின் இறுதியில் இந்திய மக்கள் தொகை 142.86…

Read More

அரசாங்கத்துக்கு எதிரான யாத்திரை யாழ். நல்லூரில் ஆரம்பம்

எதிர்க்கட்சிகளின் ஏற்பாட்டில் அரசாங்கத்துக்கு எதிரான யாத்திரை யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயிலில் இடம்பெற்ற வழிபாடுகளுக்கு பின்னர் ஆரம்பித்தது. இந்நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஐக்கிய மக்கள் கட்சியின் பிரதிச் செயலாளர் உமாச்சந்திர பிரகாஷ் உட்பட கட்சியின் அமைப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். மேலும் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக கையெழுத்து சேகரிப்பும் இடம்பெற்றது. அரசாங்கத்தின் அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக நடைபெறவுள்ள குறித்த யாத்திரை யாழ்ப்பாணம், மன்னார், காத்தான்குடி, கண்டி மற்றும் கதிர்காமம்…

Read More

சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரம் கர்தினாலிடம் இல்லை – மைத்திரி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரம் நீதித்துறைக்கும், பிரதம நீதியரசருக்குமே உண்டு என்றும், கர்தினாலுக்கு அல்ல எனவும் முன்னாள் ஜனாதிபதியான நாடாளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அபராதம் செலுத்தாவிட்டால் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும் என்றும், நீதிமன்றத்தை மதித்து அபராதம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்ற மைத்திரிபால சிறிசேன ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Read More

இலங்கை மின்சாரசபை மறுசீரமைப்பிற்கு அமைச்சரவை அனுமதி

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு செயல்முறையின் முன்மொழியப்பட்ட வரைபடத்திற்கும் கால அட்டவணைக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். அதன்படி, மே மாத இறுதிக்குள் புதிய மின்சார சட்டத்தின் இறுதி வரைவு பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும். மேலும் மறுசீரமைப்பு திட்டத்தை ஒருங்கிணைக்க ஒரு பணியகத்தை நிறுவவும், குறித்த செயல்முறை மற்றும் மறுசீரமைப்பு திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி, USAID மற்றும் JICA போன்ற அபிவிருத்தி பிரதிநிதி நிறுவனங்களின்…

Read More