முட்டைகளுக்கு விலை நிர்ணயம் : அதிவிசேட வரத்தமானி வெளியானது

முட்டைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை முதல் இப்புதிய விலைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. அதற்கமைய வெள்ளை நிற முட்டையொன்றுக்கான அதிகபட்ச சில்லறை விலை 44 ரூபாவாகவும் , ஒரு கிலோ கிராம் வெள்ளை முட்டையின் அதிக பட்ச சில்லறை விலை 880 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே வேளை பழுப்பு நிற முட்டையொன்றுக்கான அதிகபட்ச சில்லறை விலை 46 ரூபாவாகவும் , ஒரு கிலோ கிராம் பழுப்பு…

Read More

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகளை மறுக்கும் லங்கா ஐ.ஓ.சி.

வாகன எரிபொருள் திறன் தொடர்பான சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகளை லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் மறுத்துள்ளது. அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக கொள்ளளவுக்கு அதிகமாக எரிபொருளை நிரப்புவதைத் தவிர்க்குமாறு வாகன உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும், அது வெடிக்கக் கூடிய அபாயம் காணப்படுவதாகவும் சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வருகின்றன. இது குறித்து தெளிவுபடுத்தல் அறிக்கையை வெளியிட்டுள்ள ஐ.ஓ.சி. அத்தகைய எச்சரிக்கை எதையும் வெளியிடவில்லை என்றும், இது சமூக ஊடக தளங்களில் பரப்பப்படும் ஒரு போலி செய்தி…

Read More

அடுத்த வாரம் கல்வி அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்தப்படும்-ஜனாதிபதி ரணில்

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை ஆரம்பிப்பது தொடர்பில் இவ்வார இறுதிக்குள் தீர்க்கமான பதிலை உரிய அதிகாரிகள் வழங்க வேண்டும். அவ்வாறில்லை எனில் அடுத்த வாரம் கல்வித்துறையை அவசர நிலைமையின் கீழ் அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம் நேற்று புதன்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ள ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளதாவது : பரீட்சை…

Read More

திருமணம் நடக்காமல் கர்ப்பமாக இருக்கிறாரா நடிகை இலியானா?

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளிலும் படங்கள் நடித்து முன்னணி நாயகியாக வலம் வந்தவர் தான் இலியானா. 2006ம் ஆண்டு தேவதாசு என்ற தெலுங்கு படத்தின் மூலம் நாயகியாக நடிக்க ஆரம்பித்தவர் அந்த படத்திலேயே பெரிய வெற்றியை கண்டார். அதன்பிறகு போக்கிரி, ராக்கி, முன்னா, ஜல்சா என தொடர்ந்து தெலுங்கில் நிறைய ஹிட் கொடுத்தார். 2012ம் ஆண்டு ஹிந்தியில் பர்பி படத்தில் நடித்து சிறந்த நாயகிக்கான பிலிம்பேர் விருது கூட பெற்றார். இப்போது தான் படங்கள் நடிப்பதில்லை,…

Read More

துபாயில் இரு தமிழர்கள் உட்பட 16 பேர் உடல் கருகி பலி

துபாயில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த இருவர் உட்பட 16 பேர் உயிரிழந்தனர். துபாயில் அல் ராஸ் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது தளத்தில் கடந்த சனிக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அங்கிருந்த குடியிருப்புவாசிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இந்நிலையில், தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அடிக்குமாடி குடியிருப்பில் பற்றி எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த…

Read More

வெப்பநிலை அதிகரிப்பு: குழந்தைகள், முதியவர்கள் குறித்து எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை இன்று அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் குருநாகல் மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் வெப்பநிலை அவதானத்திற்குரிய மட்டத்திற்கு உயரக்கூடும் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, வெப்பமான காலநிலையில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அரச ஆயுர்வேத வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதேபோல், அதிக வெப்பநிலையால் ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு கவனமாகப் பின்பற்ற வேண்டிய…

Read More

பெருந்தொகை போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

60,460 சட்டவிரோத போதை மாத்திரைகளை (34 கிலோ) இறக்குமதி செய்த சந்தேகநபர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் விமான நிலையத்தின் ஊடாக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளார். அவரது பயணப்பொதிகளை பரிசோதித்த போது, ​​ மறைத்து வைக்கப்பட்டிருந்த போதை மாத்திரைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஹெரோயின் போதைக்கு அடிமையானவர்கள் மாற்று மருந்தாக இந்த மாத்திரைகளை பயன்படுத்துவதாக…

Read More

ரஷ்யா – உக்ரைன் போரை அமெரிக்கா தூண்டி விடுகிறது- பிரேசில் அதிபர்

ரஷ்யா – உக்ரைன் போரை அமெரிக்கா தூண்டி விடுவதாக பிரேசில் அதிபர் லூலா கூறியதற்கு அமெரிக்கா கடும் விமர்சனத்தை அவர் மீது வைத்துள்ளது. பிரேசில் அதிபர் லூலா சில நாட்களுக்கு முன்னர் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார். இப்பயணத்தின்போது உக்ரைன் – ரஷ்யா போரை குறித்தும் லூலா பேசி இருந்தார். “அமெரிக்கா போரை தூண்டி விடுவதை நிறுத்திவிட்டு, அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்” என்று அவர் வலியுறுத்தி இருந்தார். லூலாவின் பேச்சை அமெரிக்கா கடுமையாக விமர்சித்தது. இந்த நிலையில்,…

Read More

சீன கைத்துப்பாக்கியுடன் ஓய்வுபெற்ற இராணுவ சார்ஜன்ட் கைது

சீனாவில் தயாரிக்கப்பட்ட தானியங்கி கைத்துப்பாக்கி மற்றும் 11 தோட்டாக்களை சட்ட விரோதமான முறையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஓய்வுபெற்ற இராணுவ சார்ஜன்ட் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ராஜாங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பஹல்மரகஹேவா பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ஓய்வுபெற்ற இராணுவ சார்ஜன்ட்டே கைதுசெய்யப்பட்டுள்ளார். ராஜாங்கனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More

இலங்கை சிறுவர்களை ஐரோப்பாவிற்கு கடத்திய மலேசிய தம்பதியினர் கைது

மலேசிய கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி இலங்கையை சேர்ந்த சிறுவர்களை ஐரோப்பிய நாடுகளிற்கு கடத்தும்  கும்பலொன்றை மலேசிய அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். கோலாலம்பூரில் தம்பதியினர் கைதுசெய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து  இலங்கையை சேர்ந்த சிறுவர்களை ஐரோப்பிய நாடுகளிற்கு கடத்தும் நடவடிக்கை குறித்து தெரியவந்துள்ளது. பஹ்னு இன்டநசனல்ஸ் என்ற நிறுவனத்தினர் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். 12 வயதிற்கு உட்பட்ட பிள்ளைகள் உள்ள வறிய மலேசிய குடும்பங்களிடமிருந்து அவர்களின் விபரங்களை பெற்று  அதனை பயன்படுத்தி இலங்கை சிறுவர்களை  ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிற்கு கடத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்றன…

Read More