முல்லைத்தீவில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற அன்னை பூபதியின் 35 ம் ஆண்டு நினைவேந்தல்

முல்லைத்தீவில் உணர்வுபூர்வமாக அன்னை பூபதியின் 35 ம் ஆண்டு நினைவேந்தல் இடம்பெற்றது. நாட்டுப்பற்றாளர் தியாகச் சுடர் அன்னை பூபதியின் 35ம் ஆண்டு  நினைவேந்தல் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டத்தின்  உடையார்கட்டு பகுதியில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. முன்னாள் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் ஆறுமுகம் ஜோன்சன் தலைமையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் பொதுச்சுடரை மாவீரர் மேஜர் கதிரவன் அவர்களின் தந்தையார் ஏகாம்பரம் ஜயா ஏற்றினர். ஈகைச்சுடரினை சமூக செயற்பாட்டாளர் முல்லை ஈசன் ஏற்றி வைத்ததை தொடர்ந்து மலர்வணக்கம் இடம்பெற்றது. நிகழ்வில்…

Read More

தேசிய கண் வைத்தியசாலையில் சகல சத்திர சிகிச்சைகளும் இடை நிறுத்தம்

தேசிய கண் வைத்தியசாலையில் சகல சத்திர சிகிச்சைகளும் உடன் அமுலாகும் வகையில் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட சிலருக்கு ஒரு வகை தொற்று இனங்காணப்பட்டுள்ளதன் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் ஒருவர் தெரிவித்தார். தேசிய கண் வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மேற்கொண்ட சிலருக்கு ஒரு வகை தொற்று இனங்காணப்பட்டுள்ளது. சத்திர சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் மருந்துகளின் தாக்கங்களினால் இந்த தொற்று ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது….

Read More

கணவர் இழுத்து சென்றது ஏன்? – சனா கான் விளக்கம்

தமிழில், சிலம்பாட்டம், தம்பிக்கு இந்த ஊரு, ஆயிரம் விளக்கு உட்பட சில படங்களில் நடித்தவர் சனா கான். இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் மேலும் புகழ்பெற்ற சனா கான், கடந்த 2020ம் ஆண்டு, குஜராத்தைச் சேர்ந்த இஸ்லாமிய அறிஞர் முப்தி அனஸ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். தற்போது தாய்மை அடைந்துள்ள அவர் கணவருடன் இப்தார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அங்கு அவரை, கணவர் வேகமாக இழுத்துச் செல்வது போன்ற வீடியோ சமூக…

Read More

கமலுடன் இணைகிறார் நயன்தாரா?

நடிகர் கமல்ஹாசன், ஷங்கர் இயக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். தென்னாப்பிரிக்காவில் அவர் நடித்த காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. கிளைமாக்ஸ் காட்சி மட்டுமே பாக்கி இருக்கிறது. இதன் படப்பிடிப்பு மே மாதம் நடக்க இருக்கிறது. இதையடுத்து, மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார். ‘நாயகன்’ படத்துக்குப் பிறகு இருவரும் இணைவதால் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு உள்ளது. இதில் கமல் ஜோடியாக, மூன்றாவது முறையாக த்ரிஷா நடிப்பார் என்று தகவல்கள் வெளியாயின. இதற்கு முன் கமலின் ‘மன்மதன் அம்பு’,…

Read More

கொடைக்கானலில் தொடங்கியது சூர்யாவின் ‘கங்குவா’ படப்பிடிப்பு

நடிகர் சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘அண்ணாத்த’ படத்திற்கு பிறகு இயக்குநர் ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘கங்குவா’. இந்தப் படம் 10 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகிறது. படத்தை ஸ்டுடியோ கிரீன், யுவி கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கின்றன. இதில், திஷா பதானி நாயகியாக நடிக்கிறார். ‘சீதா ராமம்’ படத்தில் துல்கர் சல்மான் ஜோடியாக நடித்த மிருணாள் தாக்கூர் மற்றொரு நாயகி என தெரிகிறது. அரத்தர், வெண்காட்டர்,…

Read More

மாற்றத்துக்கு தயாராகும் தாய்லாந்து

தாய்லாந்தில் மன்னர் ஆட்சிமுறைக்கு எதிராக குரல் கொடுத்து வந்த இளைஞர்களுக்கு அந்நாட்டின் நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளன. தாய்லாந்தில் பல ஆண்டுகளாக மன்னர் ஆட்சி முறை வழக்கத்தில் உள்ளது. தற்போது தாய்லாந்து மன்னராக வஜ்ரலாங்கோர்ன் உள்ளார். தாய்லாந்து மன்னராக இருந்த பூமிபோல் அதுல்யதேஜ் கடந்த 2016-ஆம் ஆண்டு உயிரிழந்தார். இவரைத் தொடர்ந்து, அவரின் மகனாக வஜ்ரலாங்கோர்ன் மன்னராவதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. இருப்பினும் அவர் மன்னரானார். இந்த நிலையில்தான் 2019-ல் வஜ்ரலாங்கோர்ன் தனது காதலிகளுடன்…

Read More

ஏமனில் கூட்டநெரிசலில் சிக்கி 85 பேர் பலி

ஏமன் நாட்டில் கூட்டநெரிசலில் சிக்கி 80க்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஏமன் இஸ்லாமிய நாடு. இது ரம்ஜான் நோன்பு காலம் என்பதால் அதனையொட்டி தனியார் சார்பில் உதவிகள் வழங்கும் நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பள்ளிக்கூடம் ஒன்றில் இந்த நிகழ்ச்சி நடந்தது. அப்போது உதவிப்பொருட்களைப் பெற ஒரே நேரத்தில் ஏராளமானோர் கூடினர். மக்கள் ஒருவொருக்கொருவர் போட்டிபோட்டுக் கொண்டு உதவிகளைப் பெற முயல கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி 85 பேர் பலியாகினர். 322 பேர் காயமடைந்தனர்….

Read More

“இஸ்ரேலுக்கு கடுமையான பதிலடி கிடைக்கும்” – ஈரான் அதிபர்

“எங்களுக்கு எதிராக செயல்பட்டால் இஸ்ரேலுக்கு கடுமையான பதிலடி கிடைக்கும்” என்று ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி மிரட்டல் விடுத்துள்ளார். ராணுவ தினத்தையொட்டி, ஈரானின் ராணுவத்தின் பலத்தை உலகுக்கு பறைசாற்றும் வகையில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பில் ஈரான் அதிபர் இப்ராஜிம் ரெய்சி இதனை பேசினார். \ ரெய்சி பேசும்போது தெஹ்ரான் வானில் ராணுவ விமானங்களும், கடற்கரையில் போர் விமானங்களும் அணிவகுத்து சென்றதாக அரபு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்நிகழ்வில் இப்ராஹிம் ரெய்சி பேசும்போது, “எதிரிகள்… குறிப்பாக இஸ்ரேல் நம் நாட்டிற்கு…

Read More

RR vs LSG | பிட்ச் மிக ஸ்லோ என்றாலும் இப்படியும் தோற்க முடியுமா? கையிலிருந்த வெற்றியை இழந்த ராஜஸ்தான்

ஆயிரம் நாட்களுக்கும் மேல் ஆகின்றது ராஜஸ்தான் சவாய் மான்சிங் மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு என்கிறது புள்ளி விவரங்கள். அங்கு ஆடுகளத்தின் தரம் எப்படி இருக்கும்? அதுதான் நேற்று ராஜஸ்தான் தோல்விக்குக் காரணம் என்றாலும். 155 ரன்கள் வெற்றி இலக்கை விரட்டும் போது 11.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 87 ரன்கள் என்ற நிலையிலிருந்து அடுத்த 9 ஓவர்களில் வெறும் 57 ரன்களை மட்டுமே எடுத்து அதுவும் ஆல் அவுட் ஆகாமல் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து…

Read More

பயங்கரவாத எதிர்ப்பு சட்டவரைபை எதிர்த்து  கவனயீர்ப்பு  ஆர்ப்பாட்டம்

வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டமைப்பால் தற்போது வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டவரைபை எதிர்த்து  கவனயீர்ப்பு  ஆர்ப்பாட்டம் இன்று வியாழக்கிழமை யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது. மனித உரிமைகளுக்கு மதிப்ளியுங்கள் ,சிறுபான்மையினரை அடக்குவதற்கு புதிய சட்டத்தை உருவாக்காதே,பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் வேண்டாம் ,அச்சமின்றி வாழவிடுங்கள்,அச்சுறுத்தும் சட்டங்களை உருவாக்காதே, மனித உரிமை செயற்பாட்டாளர்களை முடக்காதே, போன்ற முன்று மொழிகளில் பதாதைகளை தாங்கியவாறு  ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.தொடர்ந்து கண்டன அறிக்கை வாசிக்கப்பட்டு  குறித்த அறிக்கை உரிய திணைக்கழங்கள் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவுக்கு…

Read More