உயர்தரப் பரீட்சை தமிழ் மொழி விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களைத் திருத்துவதற்கான முதற்கட்டப் பணிகள் நேற்று வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்து சமயம், கிறிஸ்தவம், இந்து நாகரிகம், பரதநாட்டியம், கீழைத்தேய சங்கீதம், கர்நாடக சங்கீதம், மேற்கத்திய சங்கீதம், சித்திரம், நாடகமும் அரங்கியலும் மற்றும் ஹிந்தி ஆகிய பாடங்களுக்கான பணிகளே தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் எச்.ஜே.எம்.சீ. அமித் ஜயசுந்தர தெரிவித்தார். யாழ்ப்பாணம், கொழும்பு, மட்டக்களப்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் குருநாகல் ஆகிய நகரங்களை அண்மித்து காணப்படும் விடைத்தால் திருத்தும் நிலையங்களில்…

Read More

வியட்நாமில் தங்கவைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் 23 பேர் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர்

சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக வௌிநாடுகளுக்கு பயணிக்க முயன்று, வியட்நாமில் தங்கவைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் 23 பேர் மீள நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.   303 இலங்கையர்களுடன் பயணித்த வியட்நாம் கொடியைத் தாங்கிய மீன்பிடிப் படகு கடந்த ஆண்டு நவம்பர் 7 ஆம் திகதி வியட்நாம் கடலில் மூழ்கியது.  இவர்கள் இலங்கை கடற்படையின் மீட்புப் பிரிவின் ஒத்துழைப்புடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, வியட்நாமில் அகதிகளாக தங்கவைக்கப்பட்டிருந்தனர்.  இவ்வாறு தங்கவைக்கப்பட்டிருந்தவர்களில் 151 பேர் ஏற்கனவே அழைத்து வரப்பட்டிருந்த நிலையில், மேலும் 23 பேர் கடந்த…

Read More

மார்ச் மாதத்தில் பணவீக்கம் கணிசமாகக் குறைவடைந்துள்ளது

தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண் அடிப்படையில், மார்ச் மாதத்தில் பொருட்களின் விலை அதிகரிப்பு அல்லது பணவீக்கம் கணிசமாகக் குறைவடைந்துள்ளது. பெப்ரவரியில் 53.06 வீதமாக காணப்பட்ட பணவீக்கம், மார்ச் மாதத்தில் 49.2 வீதமாக குறைவடைந்துள்ளது. தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின் படி, மார்ச் மாதத்தின் உணவுப் பணவீக்கம் 42.3 மூன்று வீதமாகக் குறைவடைந்துள்ளது. இருப்பினும், உணவு அல்லாத பணவீக்கம் தொடர்ந்தும் 54.9 வீதமாகக் காணப்படுகின்றது.

Read More

அரசாங்கம் தயங்குவது வேதனையளிக்கிறது !பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை

உயிர்த்த ஞாயிறு தினமான 2019 ஏப்ரல் 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் விவகாரத்தில் தற்போதைய தலைமைத்துவத்தில் நம்பிக்கை கொள்ள முடியாது என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட ஆராதனையின் பின்னர் ஆற்றிய உரையிலேயே பேராயர் இதனைத் தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் , தாக்குதல்களில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்தும்,…

Read More

சூடானில் 72 மணி நேர போர் நிறுத்தம்: ஐ.நா. அழைப்பை ஏற்றது இராணுவம், துணை இராணுவம்

சூடானில் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டுள்ள இரு தரப்பும் 72 மணி நேரம் போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும். மக்கள் ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாட ஏதுவாகவும், விரும்புவோர் வேறு இடங்களுக்கு பெயரத் தோதாகவும் 72 மணி நேர போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்று ஐ.நா. சபை வலியுறுத்தியுள்ளது. இதனை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சூடான் இராணுவமும், துணை இராணுவப்படையும் ஏற்றுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் செய்தியாளர்களிடன் கூறுகையில், “சூடான் கலவரம் தொடர்பாக ஆப்பிரிக்க…

Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; 4 ஆவது ஆண்டு விசேட ஆராதனைகள்

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குல்  சம்பவத்தில் பலியானவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்கான 4 ஆவது ஆண்டு விசேட ஆராதனைகள் வெள்ளிக்கிழமை (21) காலை கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலம், நீர்கொழும்பு கட்டுவப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயம் மற்றும் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில்  ஒப்புக்கொடுக்கப்படவுள்ளன. மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் கொழும்பு  கொச்சிக்கடை அந்தோனியார் திருத்தலத்தில் ஒப்புக்கொடுக்கப்படும் நினைவுத் திருப்பலியானது காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக, காலை 7…

Read More

புதிதாக 1,320 வைத்தியர்கள் நியமனம்

நாட்டில் வைத்தியர்கள் 1,320 பேருக்கு எதிர்வரும் 25 ஆம் திகதியில் இருந்து புதிதாக நியமனம் வழங்குவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கிணங்க இந்த வைத்தியர்கள் அன்றிலிருந்து நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளகளுக்கு இணைத்துக் கொள்ளப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அவ்வைத்தியர்கள் பிரதானமாக பின்தங்கிய பிரதேச வைத்தியசாலைகளில் பணிபுரிவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது நாட்டில் அனைத்து வைத்தியர்களின் எண்ணிக்கை 19,000 ஆகக் காணப்படுவதுடன், புதிய வைத்தியர்களின் நியமனத்துடன் அவர்கள் 20,000 ஆக அதிகரிக்கப்படவுள்ளனர். கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட…

Read More

கொடைக்கானலில் தொடங்கியது சூர்யாவின் ‘கங்குவா’ படப்பிடிப்பு

நடிகர் சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘அண்ணாத்த’ படத்திற்கு பிறகு இயக்குநர் ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘கங்குவா’. இந்தப் படம் 10 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகிறது. படத்தை ஸ்டுடியோ கிரீன், யுவி கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கின்றன. இதில், திஷா பதானி நாயகியாக நடிக்கிறார். ‘சீதா ராமம்’ படத்தில் துல்கர் சல்மான் ஜோடியாக நடித்த மிருணாள் தாக்கூர் மற்றொரு நாயகி என தெரிகிறது. அரத்தர், வெண்காட்டர்,…

Read More

வெப்பம் உயர்வாகவுள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது : 8 மாவட்டங்களில் மாத்திரமே சாதாரண வெப்ப நிலை!

நாட்டில் வெப்பம் உயர்வாகவுள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. தற்போது 8 மாவட்டங்களில் மாத்திரமே சாதாரண வெப்ப நிலை காணப்படுவதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய மேல், வடமேல், வடக்கு , வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் , மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இவ்வாறு உயர் வெப்பநிலை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாத்தளை, கண்டி, கேகாலை, நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களை தவிர ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் உயர் வெப்ப…

Read More

அனைத்து சக்திகளையும் ஒன்றிணைத்து உரிமைகளை முடக்கும் முயற்சிகளை முறியடிப்போம் – எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் ஊடாக சர்வாதிகாரத்தை தலை தூக்கச் செய்வதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. இதற்கு எதிராக நாட்டிலுள்ள அனைத்து சக்திகளையும் ஒன்றிணைத்து மக்களின் உரிமைகளை முடக்கும் முயற்சிகளை முறியடிப்போம் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை விசேட அறிவிப்பொன்றை விடுத்து இதனைத் தெரிவித்துள்ள அவர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது : புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்திற்கு எதிராக செயற்படுவதற்கு அனைவரும் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இது மிகவும் அபாயம் மிக்க சட்ட…

Read More