பொன்னியின் செல்வன் 1-ம் பாகத்தின் கதை முன்னோட்டம் – கமல்ஹாசன் குரலில் வெளியானது

எழுத்தாளர் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்-1’ திரைப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30 திரையரங்குகளில் வெளியானது. தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் இந்த திரைப்படம் நேரடியாக வெளியாகி பல்வேறு வசூல் சாதனைகளை நிகழ்த்தியது. இந்த படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஜெயராம், சரத்குமார், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்பட பலர் நடித்திருந்தனர். லைகா நிறுவனம் தயாரித்த இந்த திரைப்படத்திற்கு…

Read More

உயர் வெப்பநிலை !கர்பிணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தற்போது நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக கர்ப்பிணி தாய்மார்கள் அதிகம் பாதிக்கப்படலாம் என வைத்தியர்கள் எச்சரிக்கின்றனர். மகளிர் மற்றும் சிறுவர் வைத்தியசாலையின் மகப்பேற்றியல் மற்றும் பெண்ணோயியல் நிபுணர் வைத்தியர் பேராசிரியர் சனத் லெனரோல் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ‘கர்ப்பிணித் தாய்மார்கள் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக மதிய நேரத்தில் வீட்டை விட்டு வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். முடிந்தவரை வீட்டிலேயே இருக்க வேண்டும். வழக்கமாக 2 லிட்டர் தண்ணீர் அருந்துபவர்கள் தற்போது சுமார் 3 முதல் 4…

Read More

அக்குரணையில் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்படவுள்ளதாக போலித் தகவல் வழங்கிய நபர் கைது

அக்குரணை நகரில் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்படவுள்ளதாக போலியான தகவலை வழங்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.  பொலிஸ் கணினிக் குற்றவியல் பிரிவு மேற்கொண்ட விசாரணைகளுக்கமைய, குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.  அக்குரணை நகரில் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தாக்குதல் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் இரண்டு சந்தர்ப்பங்களில் 118 பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.  இதனையடுத்து, பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை…

Read More

அமைதியைப் பேணுவதற்கு முப்படையினர் கடமையில்அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டார் ஜனாதிபதி!

அனைத்து மாவட்டங்களிலும் அமைதியை பேணுவதற்காக முப்படையினரை கடமைகளில் ஈடுபடுத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது.  பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 40 ஆம் அத்தியாயத்தின் 12 ஆம் பிரிவினால் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக இந்த வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.  இதற்கமைய, இன்று முதல் அமுலாகும் வகையில், நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அமைதியை பேணுவதற்காக முப்படையினரும் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.  ஒவ்வொரு மாதமும் தொடர்ச்சியாக இந்த வர்த்தமானி அறிவித்தல் புதுப்பித்து வௌியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Read More

நெடுந்தீவில் ஐவர் கூரிய ஆயுதங்களால் தாக்கிக் கொலை

யாழ்ப்பாணம் – நெடுந்தீவில் உள்ள வீடொன்றில் ஐவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் மற்றுமொரு பெண்ணும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். குறித்த பெண் படகு மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.  3 பெண்களும் இரண்டு ஆண்களுமே கொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களா என்பது குறித்து தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் கூறினர். சடலங்கள் நீதவான் விசாரணைகளுக்கான குறித்த பகுதியிலேயே வைக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை…

Read More

குலசாமி ரிலீஸ் திகதியில் மாற்றம்!

விமல், தன்யா ஹோப் நடிப்பில், ‘குட்டிப்புலி’ சரவண சக்தி இயக்கியுள்ள படம், ‘குலசாமி’. சரவண சக்தியின் மகன் சூர்யா, வில்லனாக நடிக்கிறார். காவல்துறை முன்னாள் அதிகாரி ஜாங்கிட், முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நடிகர் விஜய்சேதுபதி வசனம் எழுதியுள்ள இந்தப் படத்துக்கு ‘வைட் ஆங்கிள்’ ரவிசங்கரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பாடகர் மகாலிங்கம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். சஞ்சித் சிவா ஸ்டுடியோஸ், இந்தப் படத்தை, நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட முடிவு செய்திருந்தது. இந்நிலையில் மே 5ம் திகதிக்கு ரிலீஸ் மாற்றப்பட்டுள்ளது.

Read More

சிஐஐ தக்‌ஷின் மாநாட்டில் ‘யூத் ஐகான்’ விருது பெற்ற தனுஷ்

இந்திய மத்திய அரசின் சிஐஐ தக்‌ஷின் மாநாட்டில் ‘யூத் ஐகான்’ விருதை நடிகர் தனுஷ் பெற்றுள்ளார். மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் இந்த விருதினை வழங்கினார். தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் என பல மொழிகளில் நேரடியாக நடித்து வருபவர் நடிகர் தனுஷ். தேசிய விருது உட்பட பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். தான் சார்ந்துள்ள திரைத்துறையில் நடிகர் என்ற வட்டத்தோடு மட்டும் நின்றுவிடாமல் பாடலாசிரியர், பாடகர், இயக்குநர், தயாரிப்பாளர் என இயங்கி வருகிறார் தனுஷ். இந்தச் சூழலில்…

Read More

தாய்வான் விவகாரத்தில் எங்களை விமர்சிப்போர் கடும் விளைவுகளை சந்திப்பர்: சீனா எச்சரிக்கை

தாய்வான் விவகாரத்தில் தங்களை விமர்சிப்பவர்கள், அதற்கான விளைவுகளை சந்திப்பார்கள் என்று சீனா எச்சரித்துள்ளது. சீனாவின் எதிர்ப்பை மீறி தாய்வான் ஜனாதிபதி சாய் இங் வென் அமெரிக்காவுக்கு பயணித்ததும், அந்தப் பயணத்தின்போது அந்நாட்டு சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை சந்தித்ததற்கும் சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இம்மாத தொடக்கத்தில் சீன இராணுவம், தாய்வானைச் சுற்றி மூன்று நாட்கள் பயிற்சிகளை அறிவித்தது. இதனால், இரு நாட்டு எல்லையில் பதற்றம் நீடித்தது. மேலும், இந்த விவகாரத்தில் சீனாவின்…

Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு மைத்திரிபால சிறிசேன ஏன் பொறுப்பு கூற வேண்டும் ? தயாசிறி

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் மேற்கொள்ளப்படவில்லை. அவ்வாறிருக்கையில் அவர் எவ்வாறு இந்தத் தாக்குதல்களுக்கு பொறுப்பு கூற வேண்டியவராகின்றார் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர கேள்வியெழுப்பியுள்ளார். அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகக் கூட இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம். எனவே இதனுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகளை கண்டு பிடிப்பதற்கே முக்கியத்துவமளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். சு.க. தொகுதி அமைப்பாளர்களுடனான விசேட சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. அதன் பின்னர்…

Read More

சுயாதீன சர்வதேச விசாரணைகளின் ஊடாக உயிர்த்தஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரிகள் தண்டிக்கப்படுவர் – எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உறுதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில் எமது அரசாங்கத்தில் சுயாதீன தேசிய விசாரணைகளுக்கு அப்பால் சுயாதீன சர்வதேச விசாரணைகளும் முன்னெடுக்கப்படும். ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் நிச்சயம் நீதி நிலைநாட்டப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் , விசேட அறிவிப்பொன்றை விடுத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது : உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏன் இன்னும் நியாயம் வழங்கப்படவில்லை?…

Read More