பஞ்சாப் மாகாணத்தில் இன்று முதல் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிப்பதாக இம்ரான்கான் கட்சி அறிவிப்பு

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் சட்டசபை தேர்தலை விரைவாக நடத்த அந்த நாட்டு உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும் , தேர்தலை நடத்த பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமமையிலான அரசாங்கம் மறுத்து வருகிறது. இந்நிலையில் பஞ்சாப் மாகாணத்தில் தேர்தல் பிரசாரத்தை இன்று (24) முதல் தொடங்குவதாக முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளார் ஆசாத் உமர் தனது டுவிட்டரில், ‘தெஹ்ரீக்-இ-இன்சாப் தனது தேர்தல் பிரச்சாரத்தை நாளை (இன்று) உத்தியோகபூர்வமாக தொடங்க உள்ளது. அவர்கள்…

Read More

இவ்வாரம் டில்லிக்கு விஜயம் செய்யவுள்ள சீன பாதுகாப்பு அமைச்சர்

ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு எதிர்வரும் 27 மற்றும் 28ஆம் திகதிகளில் இந்தியாவில் நடைபெற உள்ளது. தலைநகர் டில்லியில் நடைபெறும் இந்த மாநாட்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். அந்த வகையில் இந்த மாநாட்டில் பங்கேற்க சீன பாதுகாப்பு அமைச்சர் லி ஷங்கூப் இந்த வாரம் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். 2020 பெப்ரவரியில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா-சீன படைகள் மோதிக்கொண்ட சம்பவத்திற்கு பின் சீன பாதுகாப்புத்துறை அமைச்சர்…

Read More

நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

நியூசிலாந்தின் கெர்மடெக் தீவில் இன்று (24) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2ஆகப் பதிவாகியுள்ளது. பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் இழப்போஇ பொருட்சேதமோ எதுவும் ஏற்படவில்லை. இருந்த போதிலும் நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Read More

இலங்கை கடற்பரப்பில் நிலநடுக்கம்!

அம்பாந்தோட்டை கடற்கரையிலிருந்து 25.8 கிலோமீற்றர் தொலைவில் இன்று (24) அதிகாலை 12.45 மணியளவில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் ஏதும் இல்லை என புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

Read More

இரண்டாம் உலக போரின்போது 1000 பேருடன் கடலில் மூழ்கிய ஜப்பானிய கப்பல் கண்டு பிடிக்கப்பட்டது

80 ஆண்டுகளுக்கு முன் 2-ம் உலக போரின் போது 1000 பேருடன் கடலில் மூழ்கிய ஜப்பானிய கப்பல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 1942-ம் ஆண்டு 2-ம் உலக போர் நடந்த போது , ஜப்பான் நாட்டை சேர்ந்த மான்டிவீடியோ மாரு என்ற பெயரிலான கப்பலானது ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை சுமந்து கொண்டு கடலில் பயணம் செய்து கொண்டிருந்தது. பப்புவா நியூ கினியாவில் வைத்து 850 போர் கைதிகள் மற்றும் பொதுமக்களில் 200 பேரை சிறை பிடித்த ஜப்பானியர்கள் அந்த கப்பலில் பயணித்துள்ளனர்….

Read More

நாளைய அப்டேட் உங்களை நிச்சயமாக மகிழ்விக்கும்: ‘அயலான்’ படக்குழு

“திரைப்படம் முழுவதும் வரும் வேற்றுக்கிரகவாசி கதாப்பாத்திரம் அனைவரும் விரும்பும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.மேலும் 4500+VFX காட்சிகளைக் கொண்ட இந்திய சினிமாவின் முதல் முழு நீள லைவ்-ஆக்சன் திரைப்படமாக ‘அயலான்’ இருக்கும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிவகார்த்திகேயன் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிப்பில், ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் எங்களின் பிரமாண்ட படைப்பான ‘அயலான் ‘ பற்றிய புதிய அறிவிப்பை வெளியிடுவதில் நாங்கள்…

Read More

பொன்னியின் செல்வன் 2-ம் பாகம்: வெளியானது அறிமுக வீடியோ!

எழுத்தாளர் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்குநர் மணிரத்னம் இரண்டு பாகங்களாக திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார். முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் அடுத்த பாகம் வரும் 28ஆம் திகதி வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உட்பட பல முன்னணி நடிகர் , நடிகைகள் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் முதல் பாகக் கதையின் அறிமுக…

Read More

பேர்ள் கப்பல் தீ விபத்து : இழப்பீடு கோரி சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நாளை வழக்கு தாக்கல்

எஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்திற்குள்ளானதில் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு கோரி சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நாளை திங்கட்கிழமை வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில் உள்ள சட்ட நிறுவனமொன்றிடம் இந்த நடவடிக்கைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் சஞ்ஜய இராஜரட்ணம் தெரிவித்துள்ளார். அமைச்சரவை அனுமதியுடன் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. குறித்த இழப்பீட்டு தொகை குறித்து எதிர்வரும் நாட்களில் நீதிமன்றத்திற்கு அறிவிக்கவுள்ளதாக சட்ட மா அதிபர் மேலும் தெரிவித்தார். இது குறித்து கடல்சார்…

Read More

ஐபிஎல் போட்டியின் போது கேக் வெட்டிய சச்சின்

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் 50 ஆவது பிறந்த நாள் இரண்டு நாட்கள் முன்பே கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டம் (ஏப்ரல் 22) மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இடையே நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் நடுவே நடைபெற்றது. இந்த போட்டி மும்பையின் ஹோம் கிரவுண்ட்-ஆன வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டியின் இரண்டாவது ஸ்டிராடஜிக் பிரேக்-இன் போது மும்பை இந்தியன்ஸ் டக் அவுட்-இல் சச்சின் டெண்டுல்கர்…

Read More

வினோத் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் : நவம்பரில் தொடங்கவுள்ள ஷூட்டிங்

ஷங்கர் இயக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து வருகிறார். சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் இதன் படப்பிடிப்பு இடம்பெற்றது. மே மாதத்தில் எடுக்கப்படவுள்ள கிளைமாக்ஸ் காட்சியுடன் ‘இந்தியன் – 2’ படத்தின் ஷூட்டிங் முடிவடையவுள்ளது. இதையடுத்து அவர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு நவம்பரில் தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது. பான் இந்தியா முறையில் உருவாகும் இந்தப் படத்தை அடுத்து, மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More