கச்சதீவிலும் புத்தர் சிலை

கச்சதீவில் மர்மமான முறையில் கடற்படையினரால் பாரிய பௌத்த விகாரை ஒன்று கட்டப்பட்டு, இரகசியமான முறையில் பௌத்தமயமாக்கல் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தற்போத பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது கச்சதீவு இலங்கை இந்திய பக்தர்கள் வருடம் தோறும் ஒன்று கூடி அந்தோனியாரை வழிபட்டு செல்லும் ஒரு புனித பூமியாக காணப்படும் நிலையில், தங்போது, அங்கு இரகசியமாக புத்தர் சிலை வைத்து பொளத்தமயமாக்கல் தீவிரமாக இடம்பெற்று வருகின்றமை இந்திய இலங்கை உறவில் விரிசலை ஏற்படுத்த கூடும் எனவும் சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். குறிப்பாக வடக்கு மற்றும்…

Read More

கொரிய தீபகற்பத்தில் பதற்றம்: ரேடியோ ஆக்டிவ் சுனாமியை ஏற்படுத்தும் பரிசோதனையை செய்த வட கொரியா

கடலுக்கு அடியில் ரேடியோ ஆக்டிவ் சுனாமியை ஏற்படுத்தும் பரிசோதனையை வெற்றிகரமாக நடத்தியதாக வட கொரியா தெரிவித்துள்ளது. வட கொரியாவின் தென் பகுதியில் உள்ள ஹம்க்யோங் மாகாணத்தில் கடலுக்கு அடியில் ரகசிய ஆயுதத்தை செலுத்தினோம். இது 80 முதல் 150 மீட்டர் ஆழத்தில் 59 மணி நேரத்திற்கும் மேலாக பயணித்து அதன் கிழக்கு கடற்கரையில் வெடித்தது . இதன்மூலம் ரேடியோ ஆக்டிவ் சுனாமியை ஏற்படுத்தினோம் . இந்தச் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதற்கு வட கொரிய அதிபர் கிம் மகிழ்ச்சி…

Read More

பேச்சுவார்த்தைக்காக சீனாவுக்கு அழைத்துள்ளோம்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

உக்ரைன் – ரஷ்யா போரில் அமைதி ஏற்பட பேச்சுவார்த்தைக்காக சீனாவுக்கு அழைப்பு விடுத்துள்ளோம் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். சீன அதிபர் ஜி ஜின்பிங் மூன்று நாள் பயணமாக ரஷ்யா சென்றிருக்கிறார். இந்த சந்திப்பில் ரஷ்யா, சீனா பரஸ்பர உறவுகள் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் உக்ரைன் உடனான ரஷ்யாவின் போர் விவகாரம் முக்கியத்துவம் பெற்றது. மேலும் உக்ரைன் உடனான போரை சீனாவின் முயற்சிகள் முடிவுக்குக் கொண்டு வரலாம் என்று…

Read More

இலங்கைக்கு 333 மில்லியனை முதல் கட்டமாக வழங்கிய IMF

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் முதலாம் கட்ட கடன் தொகை கிடைக்கப் பெற்றுள்ளது. அதற்கமைய 333 மில்லியன் டொலர்பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஊடகப் பிரதானிகளுடன் நேற்று (23) இடம்பெற்ற சந்திப்பின் போது நிதி அமைச்சின் செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார். நீடிக்கப்பட்ட கடன் திட்டத்தின்கீழ் எதிர்வரும் 48 மாதங்களில் இலங்கைக்கு 2.286 பில்லியன் டொலர் நிதியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர்சபை கடந்த திங்களன்று அனுமதியளித்தது. அதற்கமையயே இக்…

Read More

10 அத்தியாவசிய பொருட்களின் விலைக் குறைப்பு

இன்று முதல் 10 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி உள்நாட்டு சம்பா, வௌ்ளைப்பூண்டு, வௌ்ளை சீனி, கடலைப் பருப்பு, உள்நாட்டு உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், ரின் மீன், கடலை, நெத்தலி மற்றும் காய்ந்த மிளகாய் ஆகிய அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. குறித்த விலை விபரங்கள் பின்வருமாறு… காய்ந்த மிளகாய் கிலோ ஒன்றுக்கு 120 ரூபாய் குறைக்கப்பட்டு 1,380 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது. ஒரு கிலோகிராம் வெள்ளைப்பூண்டின் விலை…

Read More

பாராளுமன்ற பதவியில் இருந்து ராகுல் காந்தி நீக்கம்

பிரதமர் மோடி பெயர் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக குஜராத் மாநிலம் சூரத் கோர்ட்டில் ராகுலுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. சூரத் கோர்ட்டு விசாரணை நடத்தி நேற்று இந்த வழக்கில் தீர்ப்பை வெளியிட்டது. ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி அறிவித்தார். இதையடுத்து ராகுல் பாராளுமன்ற பதவி தொடர்பாக மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்தனர். எம்.பி.க்கள், எம்.எல். ஏ.க்கள்…

Read More

நடிகர் அஜித்தின் தந்தை மரணம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த துணிவு படம் மாபெரும் வெற்றியடைந்தது. இந்நிலையில், அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையில் நடிகர் அஜித்தின் தந்தை மரணமடைந்துள்ளார். ஆம், அஜித்தின் தந்தை பி. சுப்பிரமணியம் அவர்கள் இன்று காலை உடல்நல குறைவு காரணமாக மரணமடைந்துள்ளார் என அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. இவருக்கு வயது 84. இவருடைய மறைவுக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் தங்களுடைய இரங்கலை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.

Read More

சுவிஸ் ஓபன் பாட்மிண்டன்: கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் சிந்து

சுவிஸ் ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஹெச்.எஸ்.பிரனாய் ஆகியோர் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினர். சுவிட்சர்லாந்தின் பாஸல் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகத் தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரனாய், 2018-ம் அண்டு உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்ற சீனாவின் ஷி யு-வை எதிர்கொண்டார். ஒரு மணி நேரம் 4 நிமிடங்கள நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பிரனாய் 21-17, 19-21, 21-17…

Read More

ஜானி பேர்ஸ்டோவுக்கு ஐபிஎல்-ல் அனுமதி மறுப்பு

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோ தவறவிடுகிறார். 33 வயதான ஜானி பேர்ஸ்டோ கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காயம் அடைந்தார். இதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர், பல்வேறு தொடர்களில் விளையாடவில்லை. வரும் 31ம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடரில் ஜானி பேர்ஸ்டோ கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஜானி பேர்ஸ்டோவுக்கு, தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்துள்ளது.

Read More

பணிநீக்க நடவடிக்கையில் மனிதாபிமானம் வேண்டும் – சுந்தர் கடிதம்

பணிநீக்க நடவடிக்கைகளில் மனிதாபிமானத்துடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் பணியாளர்கள் 1,400 பேர் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சைக்கு திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளனர். ஆல்பபெட் பணியாளர்கள் கையெழுத்திட்டு அனுப்பியுள்ள அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கூகுள் நிறுவனத்தில் 12,000 பேர் பணிநீக்கம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், அந்த ஊழியர்களை மதிப்பாகவும், சிறந்த முறையிலும் நடத்த வேண்டும். நிறுவனத்துக்கு புதிய பணியாளர்களை தேர்வு செய்வதை நிறுத்த வேண்டும். காலியான…

Read More