சவுதி பேருந்து விபத்தில் 20 யாத்ரீகர்கள் உயிரிழப்பு

சவுதி அரேபியாவில் உள்ளபுனிதத் தலங்களான மெக்கா மற்றும் மெதீனாவுக்கு ஆண்டின் அனைத்து நாட்களிலும் முஸ்லிம்கள் உம்ரா புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். இந்நிலையில் சவுதி அரேபியாவின் தெற்கில் உள்ள ஆசிர் மாகாணத்தில் உம்ரா புனித யாத்திரை செல்வோரை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று மெக்காநகரை நோக்கி நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது. சவுதி அரேபியா மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த யாத்ரீகர்கள் அதில் இருந்தனர். இந்நிலையில் மலைகளின் வழியே ஒரு பாலத்தின் மீது அந்தப் பேருந்து செல்லும்போது திடீரென பிரேக்…

Read More

“ரஷ்யா – உக்ரைன் போரை 24 மணி நேரத்தில் முடிவுக்குக் கொண்டுவர என்னால் முடியும்” – ட்ரம்ப்

ரஷ்யா – உக்ரைன் போரை 24 மணி நேரத்தில் முடிவுக்குக் கொண்டு வர தன்னால் முடியும் என்று டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள டொனால்டு ட்ரம்ப், ”அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்குள்ளாக ரஷ்யா-உக்ரைன் போர் முடிவுக்கு வராவிட்டால், அதோடு அந்த தேர்தலில் நான் வெற்றி பெற்றால், வெற்றி பெற்றவுடன் ஒரே நாளில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும். இதற்காக ரஷ்ய…

Read More

20 க்கும் மேற்பட்ட CPC ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை

இன்று (29) சேவைக்கு சமூகமளிக்காத 20 க்கும் மேற்பட்ட இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். பெற்றோலிய சட்ட கூட்டுத்தாபனத்தின் எல்லைக்குள் அவர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்

Read More

எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் குறையும் – அரசாங்கம்

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் 92 ஒக்டேன் பெட்ரோலின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 340 ரூபாவாகும். அத்துடன் 95 ஒக்டேன் பெட்ரோலின் விலை 135 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 375 ரூபாவாகும். மேலும் சுப்பர் டீசலின் விலை 45 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 465 ரூபாவாகும். ஒட்டோ டீசலின் விலை 80 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன்…

Read More

தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் வீரப்பன் மகள்

கே.என்.ஆர் மூவிஸ் பட நிறுவனத்துக்காக கே.என்.ஆர்.ராஜா தயாரித்து இயக்கி ஹீரோவாக நடித்து உள்ள படம், ‘மாவீரன் பிள்ளை’. மறைந்த வீரப்பன் மகள் விஜயலட்சுமி ஹீரோயினாக அறிமுகமாகிறார். தவிர, தெருக்கூத்து கலைஞனாக ராதாரவி நடித்துள்ளார். மஞ்சுநாத் ஒளிப்பதிவு செய்ய, பாடல்களுக்கு ரவிவர்மா இசை அமைத்துள்ளார். ஆலயமணி பாடல்கள் எழுதியுள்ளார். பிரேம் பின்னணி இசை அமைத்துள்ளார். விஜயலட்சுமி கூறுகையில், ‘சின்ன வயதில் இருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. சமூகத்தில் ஒரு பக்கம் குடி, மறுபக்கம் காதல்…

Read More

அமெரிக்கா,சீனா,அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு இலங்கையில் எரிபொருள் விற்க அனுமதி

இலங்கையில் எரிபொருள் சந்தையில் நுழைவதற்கு 3 வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இந்த தகவலை டுவிட்டர் பதிவு ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார். சீனாவின் சினோபெக், அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் மற்றும் அமெரிக்காவின் ஆர்எம் பார்க்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு இலங்கையில் எரிபொருள் விற்பனை சந்தையில் நுழைவதற்கான உரிமங்கள் இவ்வாறு வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம், இலங்கையில் உள்ள எரிபொருள் சந்தையில் சம்பந்தப்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தலா 150 எரிபொருள் நிரப்பு…

Read More

அமெரிக்க பாடசாலையில் துப்பாக்கி சூடு: குழந்தைகள் உட்பட 6 பேர் பலி

அமெரிக்காவில் பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உட்பட 6 பேர் பலியாகியுள்ளனர். டென்னிசி மாகாணத்தின் தலைநகரான நாஷ்வில்லில் உள்ள ஆரம்ப பாடசாலையில் மர்ம நபர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதில் 3 குழந்தைகள் உட்பட 6 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். 3 குழந்தைகள் தவிர பாடசாலை ஊழியர்கள் 3 பேரும் உயிரிழந்ததை நாஷ்வில் நகர காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் அடையாளம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. எனினும், துப்பாக்கிச்…

Read More

“Aukus” உடன்படிக்கை சீனா – குவாட் இடையிலான போட்டியை தீவிரப்படுத்தியுள்ளது -ரணில்

பலம் வாய்ந்த நாடுகளின் அதிகாரப் போட்டியோ மோதலோ, இந்திய சந்தைப் பிரவேசத்திற்கோ அல்லது ஆபிரிக்க சந்தை வாய்ப்பிற்கு இலங்கைக்கு தடையாக அமையக் கூடாது என ஜனாதபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அவுஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளுக்கு இடையில் அண்மையில் ஏற்படுத்தப்பட்ட “Aukus” உடன்படிக்கையானது சீனா மற்றும் குவாட் இடையிலான போட்டியை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். ஹார்வட் பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் கடந்த 24 ஆம் திகதி நடைபெற்ற நேர்காணலில் சூம் தொழில்நுட்பம் ஊடாக…

Read More

இம்ரான் கான் கொல்லப்படுவார் – பாகிஸ்தான் உள்துறை அமைச்சர்

“இம்ரான் கான் கொல்லப்படுவார் அல்லது நாங்கள் கொல்லப்படுவோம்” என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ராணா சனாவுல்லா பேசும்போது, “பாகிஸ்தானின் ஆளும் கட்சிக்கு எதிரியாக இம்ரான் கான் இருக்கிறார். முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பாகிஸ்தானின் அரசியலைக் கொண்டு சென்றிருக்கும் பாதையால் ஒன்று அவர் கொல்லப்படுவார் அல்லது நாங்கள் கொல்லப்படுவோம். இம்ரான் கான் அரசியலை பகையாக மாற்றி இருக்கிறார். அவர் எங்கள் எதிரி. அவ்வாறே அவர் நடத்தப்படுவார்” என்று பேசினார்….

Read More

லவ் டுடே இந்தி ரீமேக்கில் ஸ்ரீதேவியின் 2வது மகள்

பிரதீப் ரங்கநாதன் இயக்கி, கதாநாயகனாக நடித்த படம், ‘லவ் டுடே’. இவானா, யோகிபாபு, சத்யராஜ், ராதிகா உட்பட பலர் இதில் நடித்திருந்தனர். நவீன காதலை காமெடியாக சொல்லியிருந்த இந்தப் படம் வரவேற்பைப் பெற்றது. ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்த இந்தப் படம் இந்தியில் ரீமேக் ஆக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நடிகர் ஆமீர்கானின் மூத்தமகன் ஜுனைத்தும் ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூரும் இணைந்து இதன் ரீமேக்கில் நடிக்க இருக்கின்றனர். பான்டோம் ஸ்டூடியோஸுடன் இணைந்து ஏஜிஎஸ்…

Read More