சிறப்பு அனுமதி பெற்று சினிமாவில் நடிக்கும் பெண் பொலிஸ் அதிகாரி
மத்தியப் பிரதேச மாநிலம் போபால் பகுதியைச் சேர்ந்தவர், சிம்லா பிரசாத். கடந்த 2010ல் ஐபிஎஸ் அதிகாரியான அவர், தற்போது அந்த மாநிலத்திலேயே பணியாற்றி வருகிறார். அவரது தாயார் மெஹ்ருன்னிஷா, எழுத்தாளர். தந்தை பகீரத் பிரசாத், முன்னாள் போலீஸ் அதிகாரி. நடிப்பு மற்றும் நடனத்தில் அதிக ஆர்வம் கொண்ட சிம்லா பிரசாத், தந்தையின் விருப்பத்துக்காக ஐபிஎஸ் முடித்தார். தற்போது போலீஸ் அதிகாரியாகப் பணியாற்றி வந்தாலும், அவ்வப்போது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். ‘அலிஃப்’ என்ற படத்தில் ஷம்மி என்ற கேரக்டரில்…

