மாசடைந்த நாடுகளின் பட்டியல் – இந்தியாவுக்கு 8 ஆம் இடம்
அதிகம் மாசடைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 8 ஆம் இடம் கிடைத்துள்ளது. ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த IQAIR என்ற நிறுவனம் உலக நாடுகளின் காற்று தரம் தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது. சுமார் 131 நாடுகளில் உள்ள 7,300 நகரங்களில் நடத்திய ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆய்வு அறிக்கையில் கூறிப்பிடப்பட்டுள்ளதாவது, “2022 -ல் உலகில் மாசடைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 8 ஆம் இடம் பிடித்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு இந்தியா ஐந்தாமிடத்தில் இருந்தது….

