18 கிலோ போதைப்பொருளுடன் யாழில் இளைஞன் கைது

யாழ்ப்பாணம், இடைக்காட்டு பகுதியில் சொகுசு காரில் பெருந்தொகையான போதைப்பொருளை கடத்திச் சென்ற இளைஞன் ஒருவனை இராணுவத்தினர் கைது செய்துள்ளனர். இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நேற்று (30) மாலை தொண்டைமானாறு இடைக்காட்டு பகுதியில் இருந்து சுன்னாகத்திற்கு போதைப்பொருளை கடத்திச் செல்லும் போது குறித்த இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞர் செலுத்தி வந்த சொகுசு காரும் 18 கிலோ கிராம் போதைப்பொருளும் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவரும்…

Read More

டொனால்ட் டிரம்ப் மீது குற்றவியல் வழக்கு பதிவு

வரலாற்றில் முதல் முறையாக, அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் மீது குற்றவியல் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப்பின் மீது இவ்வாறு குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டொனால்ட் டிரம்ப் ஆபாச நடிகையான ஸ்டோர்மி டேனியல்ஸ் என்பவருடன் நெருக்கமாக இருந்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு, அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின் போது, இந்த விவரம் மிகப்பெரிய பிரச்சனையாக மாறியது. இதை மறைத்து, தங்கள் உறவு பற்றிய தகவல் வெளிவராமல் இருப்பதற்கு, அந்த நடிகைக்கு டொனால்ட்…

Read More

ஜப்பான் இலங்கைக்கு இடையே ஒப்பந்தம்

பிளாஸ்டிக் முகாமைத்துவ திறன் அபிவிருத்தி´ திட்டம் தொடர்பான ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்திற்கும் (JICA) சுற்றாடல் அமைச்சுக்கும் இடையிலான ஒப்பந்தம் நேற்று (29) சுற்றாடல் அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் கலாநிதி அனில் ஜாசிங்க மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் இலங்கைத் தலைவர் டெட்சுயா யமடா ஆகியோருக்கு இடையில் அமைச்சில கைச்சாத்திடப்பட்டது. இந்நிகழ்வில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர், பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் சுற்றாடல் அமைச்சின் மேலதிக செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும்…

Read More

விரைவில் புதிய வரி – ஜனாதிபதி

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான கடன் வசதியுடன் தொடர்புடைய பொருளாதார மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் உரிய முறையில் முன்னெடுக்கப்பட்டால், இலங்கையின் பொருளாதாரம் சரியான பாதையில் பிரவேசிக்கும் என எதிர்ப்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நேர்மறையான வரி சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தி வறிய மக்கள் மீதான VAT போன்ற வரிச் சுமையை குறைப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் ஜனாதிபதி…

Read More

இலங்கை கடற்பரப்பில் நிலநடுக்கம்

பேருவளை அண்டிய கடற்பரப்பில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று மதியம் 1.02 மணியளவில் பேருவளை கடற்கரையிலிருந்து 37 கிலோமீற்றர் தொலைவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 3.7 ஆக பதிவாகியுள்ளதாக பணியகம் மேலும் தெரிவித்துள்ளது. பேருவளை பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ள நிலையில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Read More

உத்தேச புதிய பயங்கரவாத தடைச்சட்டம் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகின்றது – சந்திரிகா

புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை தோற்கடிக்க அனைவரும் முன்வரவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். புதிய பயங்கரவாத தடைச்சட்டம்  மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகின்றது என  கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வேண்டுகோள் விடுத்துள்ள அவர் இந்த சட்டமூலத்தை தோற்கடிக்க மக்கள் ஐக்கியப்படவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாங்கள் எங்கள் அரசியல் வேறுபாடுகளை மறந்துவிட்டு இந்த இடத்தில் சமூக செயற்பாட்டாளர்கள் என எங்களை கருதுவோம் இந்த புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை தோற்கடிப்பதற்கு நாங்கள் ஒன்றிணையவேண்டும் என அவர்…

Read More

இலங்கைக்கு கடத்த முயன்ற 500 கிலோ கடல் அட்டை பறிமுதல்

வேதாளையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 500 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புலனாய்வு பிரிவு மற்றும் தீவிர குற்றத்தடுப்பு போலீசார் இணைந்து கடல் அட்டைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

Read More

மயாமி ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் ஜெஸ்ஸிகா

அமெரிக்காவில் நடக்கும் மயாமி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, உள்ளூர் நட்சத்திரம் ஜெஸ்ஸிகா பெகுலா தகுதி பெற்றார். காலிறுதியில் அனஸ்டேசியா போதபோவாவுடன் மோதிய ஜெஸ்ஸிகா 4-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். பின்னர் சுதாரித்துக்கொண்டு விளையாடிய ஜெஸ்ஸிகா 6-3 என 2வது செட்டை கைப்பற்ற சமநிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 3வது மற்றும் கடைசி செட்டில் அனல் பறந்தது. இரு வீராங்கனைகளும் தங்கள் சர்வீஸ் ஆட்டத்தை தக்கவைத்து புள்ளிகளைக்…

Read More

தோனிக்கு கடைசி சீசனாக இருக்க வாய்ப்பு இல்லை: ரோகித் சர்மா

ஐபிஎல் டி20 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனிக்கு இந்த சீசனே கடைசியாக இருக்கும் என நினைக்கவில்லை என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, “ஐபிஎல் தொடரில் தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்கும் என நான் கருதவில்லை. இதை நான் கடந்த 2 முதல் 3 வருடங்களாக கேள்விப்பட்டு வருகிறேன். அவர், இன்னும் விளையாடுவதற்கான உடற்தகுதியுடன் இருக்கிறார் என்றே நான் கருதுகிறேன். தோனி…

Read More

வட -கிழக்கில் சைவமக்கள் பிரச்சனைகள் தொடர்பில் அவசர கலந்துரையாடல்

வடக்கு கிழக்கிலுள்ள சைவசமையம் சார்ந்த அமைப்புக்கள், கோவில் தர்மகர்த்தாசபையினர், ஆதீன கர்த்தாக்கள், கோவில் நிர்வாகத்தினைச் சேர்ந்தவர்களுக்கான அவசர கலந்துரையாடல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (31) பிற்பகல் 4.00 மணிக்கு நல்லை ஆதீனத்தில் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீல ஸ்ரீ சோமசுந்தர ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.  இக்கூட்டத்திற்கு மேற்குறிப்பிட்ட அமைப்புக்களைச் சார்ந்த மூன்று பிரதிநிதிகளை தவறாது சமூகமளிக்குமாறு கோரப்பட்டுள்ளது. தற்போது வடக்கு, கிழக்குப் பகுதிகளில் சைவக்கோவில்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் மற்றும் சைவமக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் தொடர்பாக ஆராய்ந்து…

Read More