திட்டமிட்ட இனவழிப்பில் இருந்து தமிழர்களைப் பாதுகாக்க முன்வாருங்கள் – பிரான்ஸ் தமிழர் கலாசார அமைப்பு
இராணுவமயமாக்கலின் மூலம் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டுவரும் திட்டமிடப்பட்டவாறான இனவழிப்பில் இருந்து தமிழீழத்தைப் பாதுகாப்பதற்கு முன்வருமாறு பிரான்ஸ் தமிழர் கலாசார அமைப்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடம் கோரிக்கைவிடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 52 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை குறித்து பிரான்ஸ் தமிழர் கலாசார அமைப்பின் சார்பில் உரையாற்றிய நிஷாந்தி பீரிஸ் இதுபற்றி மேலும் கூறியதாவது: தமிழீழ மக்கள் அதிகரித்துவரும் இராணுவமயமாக்கத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த இருவருடகாலமாக வடமாகாணத்தின் தனியொரு மாவட்டத்தில் 20 இற்கும்…

