பிரான்ஸ் கால்பந்து அணியின் கேப்டன் ஆனார் எம்பாப்பே

கிலியன் எம்பாப்பே பிராச்ன்ஸ் நாட்டு கால்பந்து அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் டிடியர் டெஸ்சாம்ப்ஸ் எம்பாப்பேவை பிரான்ஸ் அணியின் கேப்டனாக நியமித்தார். இதற்கு முன்னதாக கேப்டனாக இருந்த ஹியூகோ லோரிஸ் சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த நிலையில் அந்தப் பதவிக்கு 24 வயதான எம்பாப்பே தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2018 உலகக் கோப்பையை பிரான்ஸ் வென்றதிலிருந்து எம்பாப்பே ஏராளமான ரசிகர்களை வென்று நட்சத்திர வீரராக இருக்கிறார். அதுவும்…

Read More

2023 ஐசிசி உலகக் கோப்பைப் போட்டிகள் 

இந்தியாவில் முழுக்க நடைபெறும் 2023 ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டிகள் அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19-ம் தேதி வரை நடைபெறலாம் என்று தெரிகிறது. இந்த உலகக் கோப்பையில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதற்காக 11 மைதானங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இறுதிப் போட்டி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான அகமதாபாத்தில் நடைபெறுகின்றது. மேலும், பெங்களூரு, சென்னை, டெல்லி, தரம்சலா, குவஹாட்டி, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, இந்தூர், ராஜ்கோட் மற்றும் மும்பை மைதானங்களில் நடைபெறலாம்…

Read More

வரலாற்றின் சரியான பக்கத்தில் சீனா நிற்கிறது: புதின்

ரஷ்யா – உக்ரைன் போரில் வரலாற்றின் சரியான பக்கத்தில் சீனா நிற்கிறது என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்திருக்கிறார். சீன அதிபர் ஜி ஜின்பிங் 3 நாட்கள் பயணமாக ரஷ்யா சென்றிருக்கிறார். இந்த சந்திப்பில் இரு நாடுகளின் பரஸ்பர உறவுகள் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் உக்ரைன் உடனான ரஷ்யாவின் போர் விவகாரம் முக்கியத்துவம் பெற்றது. இதுகுறித்து புதின் கூறும்போது, “சீனா உக்ரைனுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரத்தான் முயற்சி செய்கிறது. இவ்விவகாரத்தில்…

Read More

இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் நிபந்தனையை சர்வதேச நாணய நிதியம் விதிக்க வேண்டும் – செல்வம் அடைக்கலநாதன்

நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற நிபந்தனையை சர்வதேச நாணய நிதியம் விதிக்க வேண்டும். இனப்பிரச்சினைக்கு தீர்வு என்பது காலம் காலமாக ஏமாற்றப்படும் ஒரு செயற்படாகவே காணப்படுகிறது. தமிழர்களின் உரிமைகளை அழித்து சிங்கள குடியேற்றத்தை ஸ்தாபிக்கும் பணிகளை அரச அதிகாரிகள் துரிதமாக முன்னெடுத்து வருகிறார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார், பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியம் தொடர்பில் ஜனாதிபதியின் விசேட உரை…

Read More

சர்வதேச நாணய நிதியத்தின் 10 பிரதான நிபந்தனைகளை நிறைவேற்றலாம் – மைத்திரி

சர்வதேச நாணய நிதியத்தின் 10 பிரதான நிபந்தனைகளை அரசாங்கம் தாராளமாக நிறைவேற்றலாம். ஊழல் ஒழிப்பு சட்டம் வெகுவிரைவில் இயற்றப்பட வேண்டும். அரச ஊழல் மோசடியால் இலங்கை வங்குரோத்து நிலை அடைந்தது என சர்வதேசம் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியம் தொடர்பில் ஜனாதிபதியின் விசேட உரை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண…

Read More

யாழில் 10 படகுகள் தீக்கிரை

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பொலிஸ் பிரிவில் நாகர்கோவில் மேற்கு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 படகுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. கடலட்டை தொழிலில் ஈடுபட்டு வந்த படகுகள் தற்போது தொழிலில் ஈடுபடாமல் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் தீ வைக்கப்பட்டுள்ளது. புத்தளம், தில்லையடி, அல்ஜித்தா எனும் முகவரியில் வசிக்கும் சாகுல் ஹமீது ஜௌபர் என்பவருக்குச் சொந்தமான படகுகளே இவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் மற்றும் சந்தேக நபர்களோ இதுவரை அறியப்படவில்லை ….

Read More

சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சி

அடுத்த சில வாரங்களுக்குள் உலக சந்தையில் கச்சாய எண்ணெய்யின் விலை பாரிய சதவீதத்தால் குறைவடையக்கூடும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கச்சா எண்ணெய்யின் விலை திடீரென பெருமளவு குறைவடையவதன் ஊடாக, உலகம் முழுவதிலும் உள்ள மக்களுக்கும் பாரியளவில் நிவாரணம் கிடைக்கும் என அந்தச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக எரிபொருளின் விலை சுமார் 20 வீதத்தால் குறைவடையக்கூடும் என அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. ரஷ்யா-உக்ரைன் போருக்குப் பிறகு கச்சா எண்ணெய் விலை இவ்வளவு…

Read More

92 வயதில் 5 வது திருமணம்

சர்வதேச ஊடகத்துறையின் ஜாம்பவானாக ருபெர்ட் முர்டாச் அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட பல நாடுகளில் சுமார் 120 க்கும் அதிகமான பத்திரிகைகளை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்களின் உரிமையாளரான இவர் கடந்த 1956 ஆம் ஆண்டு விமானப் பணிப்பெண் ஒருவரை மணந்தார். ஆனால், 1967 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து மூலம் பிரிந்தனர். பின்னர் பத்திரிகையாளர் ஒருவரை திருமணம் செய்துகொண்ட முர்டாச், 1999 ஆம் ஆண்டு அவரையும் பிரிந்து 3 வதாக சீனாவைச் சேர்ந்த பெண்…

Read More

சஜித்தின் 14 கேள்விகள்

லங்கா ஹொஸ்பிடல்ஸ் பி.எல்.சி. மற்றும் ஸ்ரீலங்கா டெலிகொம் பி.எல்.சி. என்பவற்றின் அரசாங்கத்திற்கு சொந்தமான பங்குகளை விற்பனை செய்வதற்கு நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் கீழ் நிறுவப்பட்ட அரச பொது நிறுவன சீர்திருத்தப் பிரிவால் முன்மொழியப்பட்டுள்ளதோடு, இதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் பிரகாரம், இதனை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளாகக் கருதி பின்வரும் விடயங்களுக்கு அரசாங்கத்திடம் இருந்து குறிப்பிட்ட பதில்களையும் விளக்கங்களையும் எதிர்பார்க்கிறேன். 1. வெளியிடப்பட்ட பங்கு மூலதனத்தில் 49.50%…

Read More

டொலர் மற்றும் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

இலங்கை மத்திய வங்கி இன்று (22) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 312.61 ரூபாவாகவும் விற்பனை விலை 330.16 ரூபாவாகவும் பதிவாகி உள்ளது. இதேவேளை, இலங்கையில் தங்கத்தின் விலையும் நேற்றைய தினத்தோடு ஒப்பிடுகையில் 10 ஆயிரம் ரூபாவால் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 22 கரட் தங்கத்தின் இன்றைய விலை 151,800 ரூபாவகவும், 24 கரட் தங்கத்தின் இன்றைய விலை 165,000 ரூபாவகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More