ரோகிணி திரையரங்கம் விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசன் கண்டனம்

சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் நேற்று ‘பத்து தல’ படத்தின் முதல் காட்சியை பார்க்க வந்த நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த மக்களை திரையரங்க ஊழியர்கள் அனுமதிக்க மறுத்துள்ளனர். ‘பத்து தல’ படம் பார்ப்பதற்கான டிக்கெட் இருந்தும் நரிக்குறவர் மக்களை அனுமதிக்காததை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இந்த வீடியோ தமிழக அளவில் வைரலாகியுள்ளது. நெட்டிசன்கள் பலரும் ரோகினி திரையரங்க ஊழியரின் செயலுக்கு கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்தனர். ரோகினி திரையரங்குக்கு எதிரான ஹேஷ்டேக்கும் ட்விட்டரில்…

Read More

இந்தி சினிமாவில் ஓரங்கட்டப்பட்டேன்: பிரியங்கா சோப்ரா

பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா, தான் இந்தி சினிமாவில் இருந்து வெளியேற்றப்பட்டதாக சமீபத்தில் அளித்த பேட்டி, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. “இந்தி திரைத்துறையில் ஓரம் கட்டப்பட்டேன். யாரும் வாய்ப்புக் கொடுக்க முன் வரவில்லை. இதனால் இந்தி சினிமாவில் இருந்து விலகிவிட்டேன். அங்கு நடக்கும் அரசியல் விளையாட்டு எனக்குப் பிடிக்கவில்லை, அந்த நேரத்தில் தான் ஹாலிவுட் வாய்ப்பு வந்தது” என அவர் தெரிவித்திருந்தார். ஏற்கெனவே நெபோடிசம், போதைப் பொருள் பயன்பாடு உள்ளிட்ட பிரச்சினையில் சிக்கியிருக்கும் இந்தி திரைத்துறை, பிரியங்காவின்…

Read More

சூரியனில் 2-வது இராட்சத துளை

பால்வளி அண்டத்தில் உள்ள பிரமாண்ட நட்சத்திரமான சூரியனில் சமீப ஆண்டுகளாகவே பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு வருகிறது. அந்த வகையில் சூரியனின் மேற்பரப்பில் ராட்சத ‘துளை’ ஒன்று தோன்றியுள்ளது. இந்தத் துளையை கரோனல் துளைகள் என்று விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். இந்த துளை பூமியை விட 30 மடங்கு அளவு பெரியது என்றும் கூறப்படுகிறது. இது குறித்து நாசா விஞ்ஞானிகள் கூறும்போது, “இந்த துளை காரணமாக வெள்ளிக்கிழமைக்குள் பூமியை நோக்கி 1.8 மில்லியன் அளவு சூரியக் காற்று வந்தடையும்….

Read More

அநுராதபுரம், முல்லைத்தீவு வைத்தியசாலைகளின் சிறுவர் சிகிச்சை பிரிவுகள் மூடப்பட்டன

அநுராதபுரம் மற்றும் முல்லைத்தீவு போதனா வைத்தியசாலைகளின் சிறுவர் சிகிச்சை பிரிவுகள் மூடப்பட்டுள்ளன. குறித்த பிரிவில் பணியாற்றிய விசேட வைத்திய நிபுணர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளமையின் காரணமாக இவற்றை மூட வேண்டியேற்பட்டுள்ளது.   அரசாங்கத்தின் நியாயமற்ற வரிக் கொள்கை காரணமாக மாதாந்தம் சுமார் 50 வைத்தியர்கள் வெளிநாடு செல்வதற்காக விண்ணப்பிப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அழுத்கே தெரிவித்தார். கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்…

Read More

கொலன்னாவ பகுதியில் பொலிஸார் துப்பாக்கி சூடு

நேற்றிரவு (30) கொலன்னாவ சிங்கபுர பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை விடுவிக்க முற்பட்ட குழுவினரை கலைக்க வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொழும்பு குற்றப்பிரிவு பொலிஸ் பரிசோதகர் துமிந்த ஜயதிலக்க மற்றும் அதிகாரிகள் குழுவினர் கொலன்னாவ சிங்கபுர விளையாட்டரங்கம் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த போது ஒருவர் கையில் எதையோ எறிவதை கண்டுள்ளனர். சந்தேக நபரை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வர முற்பட்ட போது, ​​உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் பொலிஸ் ஜீப்பை…

Read More

பிலிப்பைன்ஸ் படகு விபத்து 31 பேர் உயிரிழப்பு

தெற்கு பிலிப்பைன்ஸ் பகுதியில் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு திடீரென தீப்பிடித்ததில் அதில் பயணம் செய்த 31 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து பேசிலன் மாகாணத்தின் ஆளுநர் ஜிம் ஹட்டாமேன் கூறியதாவது. தெற்கு துறைமுக நகரமான ஜாம்போங்காவில் இருந்து சுலு மாகாணத்தில் உள்ள ஜோலோ நகருக்கு 250 பயணிகளை ஏற்றிச் சென்ற படகு நள்ளிரவு நேரத்தில் பேசிலன் நகருக்கு அருகே வந்தபோது திடீரென தீப்பிடித்தது. தீயிலிருந்து தப்பிக்க படகிலிருந்து பலர் கடலில் குதித்தனர். இந்த சம்பவத்தில் 31 பேர்…

Read More

இறுதி கட்ட போரில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள்தொடர்பில் ஆராய்கின்றோம் – நீதி அமைச்சர்

இலங்கையின் இறுதி கட்ட யுத்தத்தின் போது அரசாங்கத்திடம் சரணடைந்த 12 500 விடுதலைப்புலி உறுப்பினர்களும் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர். எனினும் இதனை விட அதிகமானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும் , கொல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றமை தொடர்பில் காணாமல் போனோர் அலுவலகம் ஆராய்ந்து வருவதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார். காணாமல் போனோர் அலுவலக செயற்பாடுகளை அடுத்த ஆண்டின் இறுதிக்குள் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர்…

Read More

செம கலெக்ஷன் பெற்ற சிம்புவின் பத்து தல

கன்னட மொழியில் வெளியான Mufti என்ற படத்தின் ரீமேக்காக தமிழில் தயாரான படம் தான் பத்து தல. சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் இருவரும் இணைந்து நடித்துள்ள இப்படம் நேற்று வெளியாகி இருந்தது. அங்கு செம ஹிட்டடித்த படம் என்றாலும் தமிழில் சிலர் புதியதாக பார்க்கும் படம் தான். இப்படத்தில் சிம்பு இருப்பதாலேயே செம ஸ்பெஷல். பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த பத்து தல திரைப்படம் வெளியாகி முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ. 7 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக…

Read More

கச்சதீவில் நிறுவப்பட்டுள்ள புத்தர்சிலையை உடனடியாக அகற்றுங்கள்- தொல்.திருமாவளவன்

கச்சதீவில் புத்தர்சிலையொன்று நிறுவப்பட்டமையைக் கடுமையாகக் கண்டித்திருக்கும் இந்திய மக்களவை உறுப்பினர் தொல்.திருமாவளவன், அந்த புத்தர்சிலையை அகற்றுவதற்கும் அப்பகுதியில் மதரீதியான ஒருமைப்பாட்டை நிலைநாட்டுவதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இந்திய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். சில வாரங்களுக்கு முன்னர் கச்சதீவில் புத்தர்சிலையொன்று வைக்கப்பட்ட விவகாரம் தமிழ்மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும், எதிர்ப்பையும் தோற்றுவித்திருந்தது. கச்சதீவிலுள்ள புனித அந்தோனியார் தேவாலயம் இலங்கை மற்றும் இந்தியவாழ் கத்தோலிக்கர்களின் முக்கிய வழிபாட்டுத்தலமாகும். இவ்வாறானதொரு பின்னணியில் கச்சதீவில் விகாரை அமைப்பதற்கான முயற்சிகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும், கச்சதீவில்…

Read More

போப் பிரான்சிஸ் விரைவில் உடல் நலம் பெற பிரார்த்திக்கிறேன் : பிரதமர் மோடி

போப் பிரான்சிஸ் கடந்த சில நாட்களாக உடல் நல குறைவினால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு சுவாசிப்பதில் சிரமம் இருப்பதால், அதற்கான சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில், கடந்த புதன்கிழமை பொதுமக்களை சந்திக்க வந்த போப் அவருடைய தனிப்பட்ட வாகனத்தில் ஏறும் போதும் இறங்கும் போதும் மிகவும் சோர்வாக, களைப்புடன் காணப்பட்டார். இதையடுத்து, அவருக்கு மூச்சிறைப்பு இருப்பது கண்டறியப்பட்டு உடனடியாக ரோம் நகரில் உள்ள கெமல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சுவாச தொற்றுநோய்க்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனுமதிக்கப்பட்ட முதல்…

Read More