மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் விசாரணைக்கு என அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட186 தமிழர்களின் 33வது ஆண்டு நினைவேந்தல் சனிக்கிழமை (09) மலை உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
சத்துருக்கொண்டானில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்குக்கு முன்பு ஒன்றுகூடிய காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மலர்தூபி விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
1990ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 09ஆம் திகதி சத்துருக்கொண்டான், பனிச்சையடி, கொக்குவில் மற்றும் பிள்ளையாரடி பகுதிகளைச் சேர்ந்த 186 தமிழர்கள் பாதுகாப்புத் படையினரால் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் நடைபெற்று 33 ஆண்டுகள் கடந்த நிலையில் அவர்களது உறவினர்களினால் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

