13 வருடத்துக்குப் பின் பாவனா தமிழில் நடிக்கும் தி டோர்

நடிகை பாவனா 13 வருடத்துக்குப் பிறகு தமிழில் நடிக்கும் படத்துக்கு ‘தி டோர் (The Door)’ என்று தலைப்பு வைத்துள்ளனர். பாவனாவின் 86-வது படமான இதன் முதல் தோற்றப் போஸ்டரை, அவர் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது. படத்தை பாவனாவின் சகோதரர் ஜெய்தேவ் இயக்கியுள்ளார். ஜூன் ட்ரீம்ஸ் சார்பில் பாவனாவின் கணவர் நவீன் ராஜன் தயாரிக்கிறார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி மொழிகளில் படம் வெளியாக இருக்கிறது.

படம் பற்றி ஜெய்தேவ் கூறும்போது, “சில மாதங்களுக்கு முன்பே இதன் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளின் கடைசிக்கட்டத்தில் இருக்கிறோம். திரையரங்கில் வெளியிடும் முயற்சியில் இருக்கிறோம்” என்றார். ஜெயதேவ், கலையரசன், அனஸ்வரா குமார் நடித்த ‘பட்டினப்பாக்கம்’ படத்தை ஏற்கெனவே இயக்கியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *