வெளிநாடுகளுக்கான முதலீட்டு ஊக்குவிப்பு பிரதிநிதிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
அந்த பிரதிநிதிகள் ஊடாக இலங்கைக்கு முதலீடுகளை பெற்றுக்கொள்வதே இதன் நோக்கமாகும்.
வௌிநாடுகளில் பணிபுரியும் அல்லது சுயதொழில் புரியும் இலங்கையர்களை முதலீட்டு ஊக்குவிப்பு பிரதிநிதிகளாக நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய கனடாவிலுள்ள முதலீட்டாளர்கள் தமது முதலீடுகளை மேற்கொள்வதற்கான பிரதிநிதியாக கனடா – இலங்கை வர்த்தக அமைப்பின் தலைவர் குலா செல்லத்துறை நியமிக்கப்பட்டுள்ளார்.

