வாணி போஜனும் யோகிபாபுவும் இணைந்து புதிய வெப் தொடரில் நடிக்கிறார்கள். சந்திரமௌலி, நிதின் சத்யா, சார்லி, குமரவேல் ஆகியோரும் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த தொடரை பிரபல டைரக்டர் ராதா மோகன் இயக்குகிறார். இவர் மொழி உள்ளிட்ட பல வெற்றி படங்களை டைரக்டு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடருக்கு சட்னி சாம்பார் என்று பெயர் வைத்துள்ளனர்.
வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர் நேஷனல் பட நிறுவனம் தயாரிக்கிறது.
இது தொடர்பில் யோகிபாபு கூறும்போது, ‘சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து பார்க்கும்படியான ஒரு தொடராக ‘சட்னி சாம்பார்’ இருக்கும்’ என்றார்.
வாணிபோஜன் கூறும்போது, ‘யோகிபாபுவுடன் நடிப்பது இதுவே முதன்முறை. எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் பணிபுரியப் போகிறேன். அனைவருக்கும் பிடிக்கும் தொடராக இது இருக்கும்’ என்றார்.

