நாட்டில் வெப்பம் உயர்வாகவுள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. தற்போது 8 மாவட்டங்களில் மாத்திரமே சாதாரண வெப்ப நிலை காணப்படுவதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய மேல், வடமேல், வடக்கு , வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் , மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இவ்வாறு உயர் வெப்பநிலை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாத்தளை, கண்டி, கேகாலை, நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களை தவிர ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் உயர் வெப்ப நிலை நீடிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.


