வவுனியா நகர மத்தியிலுள்ள வர்த்தக நிலையம் முன்பாக இன்று திங்கட்கிழமை (15) அதிகாலை சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தக நிலையம் முன்பாக எவ்வித அசைவுமின்றி ஈக்கள் மொய்த்த நிலையில் ஒருவர் உறங்கிய நிலையில் காணப்படுவதாக பொதுமகனொருவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கினார்.
இதனையடுத்து, குறித்த இடத்திற்கு சென்ற பொலிஸார் அவரின் சுவாசத்தினை பரிசோதித்த சமயத்தில் அவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டத்தினை உறுதிப்படுத்தினார்.
சடலம் தடயவியல்பொலிஸாரின் பரிசோதனைக்காக அவ்விடத்திலேயே காணப்படுவதுடன் பொலிஸார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

