அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் சட்ட வைத்தியர் ஒருவரின் தனியார் வைத்திய சிகிச்சை நிலையத்தில் 1,500 க்கும் அதிகமான வலி நிவாரணிகளை திருடிய சந்தேகத்தில் இருவர் கைது செய்யப்பட்டதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
அநுராதபுரத்தைச் சேர்ந்த 24 மற்றும் 26 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று (21) இடம்பெற்றுள்ளது.
அநுராதபுரம், மாத்தளை சந்திக்கு அருகில் அமைந்துள்ள வைத்திய நிலையத்தின் முன் கதவை உடைத்து உட்புகுந்த இருவர் குறித்த மருந்துகளை திருடிச் சென்றுள்ளதாக வைத்தியர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

