லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிந்துலை – இராணிவத்தை தோட்டத்தில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 10 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன.
இதனால் குறித்த வீடுகளில் வசித்த 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணங்கள் இதுவரை தெரியவில்லை என தெரிவித்துள்ள லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

