அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் 4 ஆண்டுகளுக்கு பின் சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அவதூறு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதை அடுத்து ராகுல் காந்தி சூரத் நீதிமன்றத்தில் ஆஜரானார். 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது கர்நாடக பிரச்சார கூட்டத்தில் மோடியின் பெயர் பற்றி ராகுல் அவதூறாக பேசியதாக புகார் எழுந்துள்ளது.
அத்துடன் 30 நாட்களில் மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேல்முறையீடு செய்ய வசதியாக ராகுல் காந்திக்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ.15,000 பிணைத்தொகை செலுத்தி ராகுல் காந்தி ஜாமின் பெற நீதிமன்றம் உத்தரவிட்டது.

