ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதியில் உக்ரைன் இராணுவம் நடத்திய தாக்குதலில் 4 பேர் பலியாகியுள்ளதோடு , மேலும் 16 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் கீவ் நகர் மீது ரஷ்ய இராணுவம் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
ரஷ்ய ஆக்கிரமிப்பு மாகாணமான லுகான்ஸ்க் அருகே கர்பாட்டி கிராமத்திலுள்ள ஒரு கோழி பண்ணையில் ரஷ்ய வீரர்கள் பதுங்கி இருப்பதாக உக்ரைனுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனால் அதன் மீது உக்ரைன் இராணுவம் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளது. இதன் போது குறித்த கட்டிடத்தில் இருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதோடு , 16 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

