கொழும்பு கொள்ளுப்பிட்டி லிபேர்ட்டிசுற்றுவட்டத்தில் நேற்று மாலை யுக்திய நடவடிக்கைக்கு எதிராக இடம்பெற்றுக்கொண்டிருந்த ஆர்ப்பாட்டத்தினை இனந்தெரியாத நபர்கள் குழப்பியுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை துன்புறுத்தி மிரட்டும் இனந்தெரியாத நபர்கள் ஆர்ப்பாட்டத்தினை கைவிடுமாறு மிரட்டுவதை காண்பிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
தனது முகத்தை மூடிய நபர் ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் நபர்ஒருவரை தாக்குவதை வீடியோ காண்பித்துள்ளது. இனந்தெரியாத நபர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதையும் காணமுடிந்துள்ளது.

