சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான விமான சேவையின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இந்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
அதற்கமைய தற்போது வாராந்தம் 4 தடவைகள் இயங்கும் விமான சேவையை நாளாந்தம் இயக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் கடந்த வாரம் இடம்பெற்ற இந்திய பயண முகவர்கள் சங்கத்தின் 67ஆவது மாநாட்டில் காணொளியூடாக உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான விமான சேவை நாளாந்தம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

