மேற்கு ஆபிரிக்க கடலில் நிர்க்கதியான புகலிடக் கோரிக்கையாளர்களின் படகு

புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிச்சென்ற படகொன்று மேற்கு ஆபிரிக்காவின் Cape Verde கடலில் நிர்க்கதிக்குள்ளானதில் 60-இற்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகின்றது.

சிறுவர்கள் உட்பட 38 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு மாதமாக கடலில் நிர்க்கதிக்கு உள்ளாகியிருந்த குறித்த  படகில் இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் செனகல் நாட்டை சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்படுகின்றது.

இந்த படகு கடந்த திங்கட்கிழமை முதல் தடவையாக அவதானிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

படகு மூழ்கியதாக ஆரம்பத்தில் தகவல்கள் வௌியாகியிருந்தாலும், பின்னர் அது கடலில் அலைக்கழிக்கப்பட்ட நிலையில் கண்டறியப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டது.

ஸ்பானிய மீன்பிடி படகொன்றினால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த படகு தொடர்பில் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்தே மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

101 பயணிகளுடன் கடந்த ஜூலை 10 ஆம் திகதி இந்த படகு செனகலில் இருந்து புறப்பட்டதாக அந்நாட்டின் வௌிவிவகார அமைச்சு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *