மெக்சிகோவில் பேரூந்து பள்ளத்தில் விழுந்து விபத்து ;27 பேர் பலி : 17 பேர் காயம்

மெக்சிகோ தலைநகர் மெக்சிகோ சிட்டியிலிருற்து நேற்று புதன்கிழமை அதிகாலை சாண்டியாகொ டி யொசண்டு நகருக்கு சென்று கொண்டிருந்த தனியார் பேரூந்தொன்று விபத்துக்குள்ளானதில் சுமார் 27 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 40 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த குறித்த பேரூந்து , ஒஹஸ்கா மாகாணத்தில் மலைப்பாங்கான பகுதியில் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து பள்ளத்தில் விழுந்ததால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் காயமடைந்த மேலும் 17 பேர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *