
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று (18)உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது .
ஆயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் காலை 10 .30 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு பொதுச்சுடர் ஏற்றப்பட்ட பின்னர் அனைத்து சுடர்களும் அஞ்சலிக்காக வருகைதந்த பொதுமக்களால் ஏற்றப்பட்டது.

அதனை தொடர்ந்து மத தலைவர்கள் நினைவுத்தூபிக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்த அதனை தொடர்ந்து பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
பொது சுடரினை 2009 இறுதிப் போரில் தனது 13 குடும்ப உறவினர்களை இழந்த தாயார் ஒருவர் ஏற்றிவைத்தார் . அதனை தொடர்ந்து நினைவேந்தல் பிரகடனம் வாசிக்கப்பட்டது.
அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்ற வளாகத்தை சூழ இறுதிப் போரை சித்தரிக்கும் காண்பியல் காட்சிகள் மற்றும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகள் என்பனவும் இடம்பெற்றது .

நினைவேந்தல் நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் ,செல்வராசா கஜேந்திரன் , சிவஞானம் ஸ்ரீதரன் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.


