முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் ; யாழ்ப்பாணத்தில் மனித சங்கிலி போராட்டம்

முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தில் கண்டணத்தை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் மருதனார்மடம், கொக்குவில் பகுதியில் மனித சங்கிலி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது

யாழ்ப்பாண மாவட்டத்திலே காலை 9 மணியளவில் மருதனார்மடத்தில் ஆரம்பித்து யாழ்ப்பாண நகர் வரையில் நீளுகின்ற வகையில்
மனித சங்கிலி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது

இதன்போது மக்கள் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள், சிவில் சமூகத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

குறித்த போராட்டத்திற்கு இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்த் தேசிய கட்சி, தமிழ் மக்கள் விடுதலைக் கழகம், தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி , தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஆதரவளிப்பதுடன் பல பொது அமைப்புகளும் இணைந்துள்ளன.

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு உயிரச்சுறுத்தல் விடுக்கப்பட்டு, அவர் நாட்டை விட்டு வெளியேறிய விவகாரத்தில் உரிய நடவடிக்கையெடுக்க வலியுறுத்தி பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *