இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் யுனிசெப் சிறுவர் அமைப்பின் தெற்காசியாவுக்கான பிராந்திய நல்லெண்ண தூதுவராக இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகளின் சிறுவர் அமைப்பான யுனிசெப் நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ள அவர் , சிறுவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாரை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இலங்கைக்கான விஜயம் தொடர்பான அறிக்கையை அவர் வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

