கரடகொல்ல பிரதேசத்தில் , எல்ல – வெல்லவாய வீதியில் இன்று காலை பேருந்து ஒன்று பள்ளத்தில் வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்தப் பகுதியில் உள்ள உமாஓயா அபிவிருத்தித் திட்ட அலுவலகத்தைச் சேர்ந்த பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேரூந்தொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர் குறித்த பேரூந்தின் சாரதி என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், காயமடைந்தவர்கள் வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

