மினுவாங்கொடை – மஹகம பகுதியில் இன்று வியாழக்கிழமை (20) அதிகாலை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் பாதாள உலகக் குழு உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மினுவாங்கொடை – மஹகம பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப்படையினர் மீது குறித்த சந்தேகநபர், துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
இதன் போது விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட பதில் துப்பாக்கிப்பிரயோகத்தின் போதே சந்தேகநபர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த 29 வயதான பாதாள உலகக் குழு உறுப்பினரான மனிக்குகே கசுன் லக்சித சில்வா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

