மாற்றத்துக்கு தயாராகும் தாய்லாந்து

தாய்லாந்தில் மன்னர் ஆட்சிமுறைக்கு எதிராக குரல் கொடுத்து வந்த இளைஞர்களுக்கு அந்நாட்டின் நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளன.

தாய்லாந்தில் பல ஆண்டுகளாக மன்னர் ஆட்சி முறை வழக்கத்தில் உள்ளது. தற்போது தாய்லாந்து மன்னராக வஜ்ரலாங்கோர்ன் உள்ளார். தாய்லாந்து மன்னராக இருந்த பூமிபோல் அதுல்யதேஜ் கடந்த 2016-ஆம் ஆண்டு உயிரிழந்தார். இவரைத் தொடர்ந்து, அவரின் மகனாக வஜ்ரலாங்கோர்ன் மன்னராவதற்கு எதிர்ப்புகள் கிளம்பின.

இருப்பினும் அவர் மன்னரானார். இந்த நிலையில்தான் 2019-ல் வஜ்ரலாங்கோர்ன் தனது காதலிகளுடன் வலம் வரும் புகைப்படங்கள் வெளியாகி தாய்லாந்தில் சர்ச்சை ஏற்படுத்தியது. மேலும் நான்காவது மனைவியாக தனது பாதுகாவலரை வஜ்ரலாங்கோர்ன் மணந்து கொண்டது அவரை மேலும் விமர்சனத்துக்கு உள்ளாக்கியது.

பதவி மற்றும் செல்வத்தை மட்டுமே வஜ்ரலாங்கோர்ன் விரும்புகிறார். மக்களின் நலனில் அவருக்கு அக்கறை இல்லை எனவும் விமர்சிக்கப்பட்டது. இது தொடர்பாகவே மாணவ அமைப்பினர் 2020-ல் மன்னர் ஆட்சிக்கு எதிராகவும், ராணுவத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தவர்களில் முக்கியமானவர் சோந்திச்சா ஜாங்க்ரூ (30) . மன்னருக்கு எதிராக போராடியதற்கு சோந்திச்சாவுக்கு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *