மாபாகே பகுதியில் இன்று புதன்கிழமை (21) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாபாகே எலப்பிட்டிவல சந்தியில் உள்ள இறைச்சிக் கடைக்கு அருகில் இன்று காலை 7.15 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் 39 வயதுடைய ஹெட்டி ஆராச்சிகே டொன் சுஜித் என அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான “வெல்லே சாரங்க”வின் உறவினர் என தெரிவிக்கப்படுகிறது.
அவர் கந்தானை பகுதியில் வசிப்பதோடு, குறித்த இறைச்சி கடையின் உரிமையாளரும் ஆவார்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

