மாணவர்கள் தங்களது காதலர்களுடன் ‘ரொமான்ஸ்’ செய்ய ஒரு வாரம் விடுமுறை: சீனா

சீனாவில் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்காக கல்லூரி மாணவர்கள் தங்களது காதலர்களுடன் ரொமான்ஸ் செய்வதற்காக ஒருவாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சீனாவில் மக்கள் தொகை பிறப்பு விகிதம் குறைவதைத் தடுப்பதற்காக, அந்நாடு பல்வேறு புதிய புதிய திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் தலைநகர் பீய்ஜிங்கில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தங்களது காதலர்களுடன் ரொமான்ஸ் செய்வதற்காக ஒரு வாரம் விடுமுறை அறிவித்துள்ளது. அதேபோல் பல கல்லூரிகளும் ஏப்ரல் முதல் வாரத்தில் மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளன.

ஃபேன் மெய் கல்விக் குழுமத்தால் நடத்தப்படும் ஒன்பது கல்லூரிகளில் ஒன்றான மியாயாங் தொழிற்கல்விக் கல்லூரியும் முதல் முறையாக ஒரு வார கால விடுமுறையை அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்த கல்லூரியின் டீன் கூறுகையில், ‘வசந்த காலம் தொடங்கியுள்ளதால் பசுமையையும், மலைகளையும் மாணவர்கள் காண வேண்டும். அப்போதுதான் வசந்தத்தை உணர முடியும். இதுபோன்ற விடுமுறை காலங்களில் மாணவர்கள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்த முடியும். இயற்கையின் மீதான காதல் அவர்களுக்கு அதிகரிக்கும். அவர்கள் கல்லூரிக்கு திரும்பும்போது திறன்மிக்கவர்களாக இருப்பர். இந்த விடுமுறை நாட்களில், தங்கள் அனுபவத்தை எழுதி வரவும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சீன அரசின் அறிவுறுத்தலின் பேரில், நாட்டின் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்கான வழிமுறைகளில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது’ என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *