மகளிருக்கான ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கியில் இந்தியா – கொரியா அணிகள் இடையிலான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.
ஜப்பானின் ககாமிகரா நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் இந்திய அணி தனது 3வது லீக் ஆட்டத்தில் நேற்று கொரியாவுடன் மோதியது. கொரியா அணி சார்பில் 15வது நிமிடத்தில் யுஜின் லீயும், 30வது நிமிடத்தில் ஜியோன் சோயியும் கோல் அடித்தனர். 2 கோல்கள் பின்தங்கிய நிலையில் இறுதிப்பகுதியில் இந்திய வீராங்கனைகள் பதிலடி கொடுத்தனர். 43வது நிமிடத்தில் தீபிகா சோரங்கும், 54வது நிமிடத்தில் தீபிகாவும் கோல் அடிக்க ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.

