சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதித் திட்ட ஏற்பாடுகள் மீதான வாக்கெடுப்பின் போது , ஆதரவாக தனது வாக்கினைப் பதிவு செய்த பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
6 பிரதான காரணிகளை முன்வைத்து குறித்த வாக்களிப்பில் கலந்து கொள்ளாமலிருப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்திருந்தது. எவ்வாறிருப்பினும் கட்சியின் தீர்மானத்துக்கு முரணாக அவர் வாக்களித்துள்ளமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

