தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்களுக்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரமளித்துள்ளது.
அதன்பிரகாரம் 7 உறுப்பினர்களின் பெயர்கள், ஜனாதிபதியின் பரிந்துரைக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய கொள்வனவு, நிதி, கணக்காய்வு மற்றும் நீதித்துறை மற்றும் பொது சேவை ஆணைக்குழுக்களுக்கான புதிய உறுப்பினர்கள் தற்போது நியமிக்கப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் தேர்தல், இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் எல்லை நிர்ணய ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படவில்லை.

